அஜ்மானில் 12ம் தேதி தமிழ்த் துளியின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி
அஜ்மான்: தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் வகையில், குழந்தைகளுக்கான பாரம்பரிய கலை நிகழ்ச்சி, வரும் 12ம் தேதி அஜ்மான் சிவ் ஸ்டார் உணவகத்தில் நடத்தப்பட உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும், இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் மறந்து போன கலைகளை மீண்டும் நினைவில் கொண்டு வரவும், தமிழர் பாரம்பரியக் கலை நிகழ்ச்சி ஒன்றை, தமிழ்த்துளி அமைப்பு வரும் 12ம் தேதி காலை 9.30 மணிக்கு அஜ்மான் சிவ் ஸ்டார் உணவகத்தில் நடத்த உள்ளது.
தமிழர் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பாடல்கள் ஆகிய பிரிவுகளில் குழந்தைகளுக்கு இடையே 4 முதல் 6 வயது வரை உள்ளவர்கள் ஒரு பிரிவாகவும், 7 முதல் 8 வயது வரை உள்ளவர்கள் ஒரு பிரிவாகவும், 9 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.
பெற்றோர்களுக்கு தமிழர் பாரம்பரிய கலைகள் குறித்த கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெறும். இது குறித்து மேலும் விபரங்களுக்கு 050 7472432, 055 5571985 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] எனும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications