இன்று துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் 12வது ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil

பசங்க, வம்சம், மெரினா ஆகிய படங்களை இயக்கிய திரு.பாண்டிராஜ் அவர்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக திரு.பி.எச். அப்துல் ஹமீத் அவர்களின் 'பாட்டுக்கு பாட்டு' நடைபெறுகின்றது. மேலும் சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யாவின் விளையாட்டு நிகழ்ச்சியான வெற்றி கொடி கட்டு', விஜய் டிவி புகழ் கிரியின் நகைச்சுவை நிகழ்ச்சி, ப்ரசித்தம்" குழுவினர்களின் கண்கவர் நடனங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.
அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அமீரகத் தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications