ஐக்கிய அரபு எமிரேட் தமிழ்ச் சங்கத்தில் கேரம், செஸ் போட்டிகள்

Subscribe to Oneindia Tamil

UAE Tamil Sangam
கராமா: ஐக்கிய அரபு எமிரேட் தமிழ்சங்கம் சார்பில் கேரம், செஸ், பழங்கள் அல்லது காய்கறிகள் மூலம் வடிவமைத்தல், பானை ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் வரும் 7ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

ஐக்கிய அரபு எமிரேட் தமிழ்சங்கம் சார்பில் கேரம், செஸ், பழங்கள் அல்லது காய்கறிகள் மூலம் வடிவமைத்தல், பானை ஓவியம் ஆகிய போட்டிகள் வரும் 12ம் தேதி நடத்தப்பட உள்ளது. கராமா நகரில் உள்ள கராமா சென்டர் பார்ட்டி ஹாலில் இப்போட்டிகள் வரும் 12ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும்.

கேரம் போட்டி:

கேரம் போட்டி ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என்று குழு போட்டிகளாக நடத்தப்படும். மேலும் வயது அடிப்படையில் 2 பிரிவுகள் பிரிக்கப்படுகிறது. 6 முதல் 15 வயது வரையுள்ளவர்கள் முதல் பிரிவாகவும், 15 வயதிற்கு மேற்பட்டோர் 2வது பிரிவாகவும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

கேரம் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளவர்கள் தனது ஜோடியுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம். தனியாக வரும் போட்டியாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஜோடி அளிக்கப்படும்.

பழம், காய்கறி வடிவமைப்பு போட்டி:

பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூலம் அலங்கார வடிவங்கள் வடிவமைக்கும் போட்டி, பெண்களுக்காக நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள், போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து தங்களின் வடிவமைப்பு திறமை காட்ட வேண்டும்.

பானை ஓவியம்:

பானை ஓவியம் 6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் குழந்தைகள், போட்டி நடைபெறும் இடத்திலேயே பானையில் ஓவியத்தை வரைய வேண்டும்.

போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், [email protected] அல்லது [email protected] என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயர்களை பதிவு செய்ய வரும் 7ம் தேதி கடைசி நாள்.

போட்டிகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+