அமீரக தமிழ்ச் சங்கத்தின் குறும்பட போட்டி: விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் குறும்பட போட்டியை நடத்துகின்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோரின் வசதி கருதி விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 15ல் இருந்து செப்டம்பர் 15க நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமீரக தமிழ்ச் சங்கம் குறும்பட போட்டியை நடத்துகின்றது. மேலும் புரஸ்கார் விருதுகள் 2012 என்ற நிகழ்ச்சியையும் நடத்துகிறது. இந்த போட்டியில் சங்க உறுப்பினர்கள் தவிர பிறரும் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் இருந்து முன்பதிவு பாரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆக்ஸ்ட் 15ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை [email protected], [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கவும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை சமர்பிக்கலாம். ஒரு படத்தை சமர்பிக்க 300 திர்ஹம்(80$) கட்டணமாகச் செலுத்த வேண்டும். அமீரக தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மட்டும் ஒரு படத்தை இலவசமாக சமர்பிக்கலாம். ஒன்றுக்கு மேல் சமர்பிக்க விரும்பும் உறுப்பினர்கள் படம் ஒன்றுக்கு 300 திர்ஹம்(80$) கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
போட்டியாளர்கள் தங்கள் குறும்படங்களை வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
சிறந்த குறும்படங்களுக்கான பரிசு விவரம்:
முதல் பரிசு- 1000 திர்ஹம்(280 $), விருது
இரண்டாம் பரிசு - 750 திர்ஹம்(205 $), விருது
மூன்றாம் பரிசு - 500 திர்ஹம்(135 $), விருது
இது தவிர அனுபவம் வாய்ந்த 3 இயக்குனர்களைக் கொண்டு சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், சிறந்த பாடகர், பாடகி, பாடல் ஆசிரியர், குழந்தை நட்சத்திரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அமீரக தமிழ்ச் சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications