இதயத்தில் மறைத்து வைத்த பொக்கிஷங்களை மீட்டெடுங்கள்!

Subscribe to Oneindia Tamil

Love
காதல் என்பது மூளை தொடர்புடையதா? இதயம் தொடர்புடையதா என்ற சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் காதலில் இதயத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் காதலின் சின்னமாக இதயத்தை உருவாக்கியிருக்கின்றனர். ஏனெனில் காதல் வயப்பட்டவர்களுக்கு இதயத்துடிப்பின் ஓசை கூட தன் துணையின் பெயரை உச்சரிப்பதைப் போலவே கேட்குமாம்.

காதலிக்கும் தருணங்களில் எதைப்பற்றியும் காதலர்களுக்கு கவலையில்லை. காதலை வெற்றிகரமாக்குவதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கும். காதலர்களாக இருந்தபோதும், அந்த காதல் வெற்றிகரமாக திருமணத்தில் கைகூடிய பின்னரும் காதலர் தினத்தை வெற்றிகரமாக கொண்டாடி இருப்பார்கள்.

காதலர்களாக இருப்பவர்கள் மட்டுமல்ல, புதிதாக மணம் புரிந்தவர்களும் கட காதலர்கள் போலத்தான். அவர்களும் இந்த காதலர் தினத்தை ஜில்லென்று கொண்டாட சின்னச் சின்னதாக சில டிப்ஸ்...

வாழ்க்கைத் துணையுடன் பயணம்

நேசத்தை வெளிப்படுத்த தனியாக ஒரு தினம் தேவையில்லை என்று ஒரு கருத்து இருந்தாலும், பிறந்தநாளைப் போல, திருமண நாளைப்போல, அன்பை வெளிப்படுத்த ஒரு சிறப்பான நாள்தான் காதலர் தினம். அந்த நாள் முழுக்க முழுக்க நேசிப்பவர்களுக்கு மட்டுமேயானது. அது காதலர்களாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, கணவன் மனைவியாகவோ, நண்பர்களாகவோ கூட இருக்கலாம். அந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதுதான் முக்கிய அம்சம்.

காதலர் தினத்தன்று நமக்கு பிரியமானவர்களுடன் இணைந்து செலவழிக்கவேண்டும். அன்றைய தினத்தில் மனதிற்கு பிடித்தமான ஒரு இடத்திற்கு செல்லலாம். இருவரும் பழைய நினைவுகளை அசைபோட்டவாரே சிறிது நடக்கலாம். அது காதலை அதிகரிக்கச் செய்யும்.

உயிரில் கலந்த உறவு

காதலர் தினத்தன்று ஒருவருக்கொருவர் உச்சரிக்கும் வார்த்தைகள் உயிர்வரை ஊடுருவ வேண்டும். அந்தநாள் தினம் தினம் அசைபோடத்தக்கதாக இருக்கவேண்டும். எனவே தொந்தரவு இல்லாத விடுதிக்கு சென்று மனதிற்கு பிடித்த உணவுக்கு ஆர்டர் செய்யுங்கள். கொஞ்சம் உணவாக இருந்தாலும் இருவரும் ரசித்து உண்ணுங்கள். அப்பொழுதுதான் பேசுவதற்கும் நேரம் கிடைக்கும். அது அற்புதமான அனுபவமாக அமையும். இரவு நேர விருந்தாக இருந்தால் இன்னும் சிறப்பானது, ஏனெனில் மகிழ்ச்சியோடு அனுபவிக்கதக்க இரவாக மாறிப்போகும்.

பொழுதுபோக்கு அரங்கு

மனதிற்கு பிடித்த திரைப்படத்திற்கு போகலாம். அது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும். இல்லையெனில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று விருப்பம்போல உற்சாகமாக விளையாடலாம். அது மறந்துபோன நினைவுகளை மீட்டெடுக்கும்.

மனம் மகிழும் பரிசு

யாருக்கு என்ன பிடிக்கும் என்பது இருவருமே நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள். உதாரணத்திற்கு ஆடை, கைக்கடிகாரம், மிகவும் பிடித்த புத்தகம், சிலைகள், ரோஜா மலர் என சிறந்த எதையாவது வாங்கி பரிசளிக்கலாம். அது உங்கள் துணைக்கு இன்ப அதிர்ச்சியைத் தரும்.

நேசத்தை மீட்டெடுக்கும் தினம்

பணத்தை செலவு செய்து வெளியில் சென்றுதான் கொண்டாட வேண்டும் என்பதில்லை. கைகளில் பணம் குறைவாக இருந்தால் வீட்டிலிருந்தே கூட காதலர் தினத்தை சிறப்பாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் கொண்டாட முடியும். வீட்டையும் மகிழ்ச்சி மிக்கதாக மாற்றியமைக்க முடியும்.

உங்கள் கைகளில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப அலங்கார பொருட்களை வாங்கி அதனை கொண்டு வீட்டை அலங்கரியுங்கள். மற்றும் உங்கள் வீட்டு இரவு நேர உணவு மேசையை அலங்கரித்துக்கொள்ளுங்கள். சற்று வித்தியாசமாக இருவரும் இணைந்து உங்கள் இருவருக்குமான இரவு உணவை தயார் செய்யுங்கள். அது ஒரு அற்புதமான தருணமாக அமையும்.

கடந்த காலத்தை மீட்டெடுங்கள்

காதலிக்கும் போது ஒவ்வொருவரும் தங்களது துணை கொடுத்த நினைவுச் சின்னத்தை பொக்கிஷமாக பெட்டியில் போட்டு பூட்டி வைத்திருப்பார்கள். மகிழ்ச்சிகரமான இந்த நாளில் இருவரும் இணைந்து வீட்டில் இருந்த வண்ணம் ஒருவருக்கொருவர் பகிர்ந்தளித்துக்கொண்ட பொருட்களை வெளியில் எடுத்து கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கலாம்.

ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்துக்கொள்வதற்காக பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள், கவிதைகள், போன்றவற்றை வெளியில் எடுத்து வந்து மீண்டும் வாசித்துப் பார்க்கலாம். அவை உங்களை மீண்டும் புதிய காதலர்களாக உருவாக்கவும் கூடும். பெற்றோருக்கு தெரியாமல் திருட்டுத் தனமாக இருவரும் அடிக்கடி சந்தித்த இடங்கள், கோபித்துக் கொண்ட சந்தர்ப்பங்களை மீண்டும் நினைவு படுத்தி உரையாடலாம்.

இது திருமணமாகிய காதலர்கள் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்வதற்குரிய ஆலோசனைகள் தான். முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பணம் அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி, காதலர் தினத்தில் உங்கள் துணையுடன் நீங்கள் சேர்த்திருக்கும் வரை அது மிக மகிழ்ச்சியான நாள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்களுக்கு தினம் தினம் காதலர் தினம்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+