Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் முப்பெரும் விழா

Subscribe to Oneindia Tamil

Dubai
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் முப்பெரும் விழா கடந்த 12ம் தேதி காலை 10 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவர் ராமலிங்கத்தை பாராட்டும் தமிழ்த்தேர் இதழின் 70வது இதழாக நம்பிக்கை சிறப்பிதழ் வெளியீடு மற்றும் நம்பிக்கை எனும் தலைப்பில் கவியரங்கம் ஆகியவை நடைபெற்றன.

ஆனிஷாவின் இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. முதல் கட்டமாக நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சிக்கு தமிழ்த்தேர் இதழின் பதிப்பாசிரியர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார்.

மகளிருக்கு முதலிடம் அளிக்கும் வகையில் மீனாகுமாரி பத்மநாதன், நர்கீஸ் ஜியா ஆகியோரின் கவிதைகளை தொடர்ந்து, நம்பிக்கை நாகராஜ், விருதை செய்யது ஹுசேன், ஜெயராமன் ஆனந்தி, முகவை முகில், காவிரி மைந்தன், கவியன்பன் கலாம், திண்டுக்கல் ஜமால், குத்தலாம் அஸ்ரப் ஆகியோருடன் ஜியாவுதீன் கவிதை வழங்கினார். இதன்மூலம் கருத்துக்கள் பொழிந்த மழையாய் கவியரங்கம் நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவர் ராமலிங்கம் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். துணை தலைவர் லிங்கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்தேர் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.

அமீரகத்தில் தமிழ் அமைப்புகள் அதிக இல்லாத காலத்தில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் மூலம் மக்களை ஒன்றிணைக்கவும், இயன்ற வரையில் உதவிகள் புரியவும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்தும், மக்களுக்கு சரிவிகித கலவையாய் கலை நிகழ்ச்சிகள் வழங்குவதில் முன்னோடியாய் விளங்கிய ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தை கடந்த 32 ஆண்டுகளாக முன்னின்று நடத்தி சென்றவர் ராமலிங்கம்.

இன்முகத்தோடு அனைவரையும் கவர்ந்து, இனிய பண்பாளர் என்ற பாராட்டை பெற்ற அவரை குறித்து, தமிழகத்தில் இருந்து ஏம்பல் தஜம்முல் முஹம்மது இயற்றிய கவிதையை அப்துல் லதீப் வாசித்தார். அமீரகத்தின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ்விழாவில் தாய்மண் வாசகர் வட்டம் சார்பில் பட்டணம் மணி வாழ்த்துரை வழங்கினார்.

அமீரகத்தமிழ் மன்றம் சார்பில் ஆசிப் மீரான் வாழ்த்து உரையாற்றினார். துபாய் மகளிர் வட்டம் சார்பில் மீனாகுமாரி பத்மநாதன், தமிழ்நாடு பண்பாட்டு கழகம் சார்பில் எழிலரசன், லிங்கண்ணன் மற்றும் வெங்கட் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வானலை வளர்தமிழ் சார்பில் அதன் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் இணைச்செயலாளர் கீழைராசா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துபாய்-தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவராக தாம் பணியாற்றிய ஆண்டுகளில் ராமலிங்கம் ஆற்றிய சேவைகளை குத்தாலம் அஸ்ரப் அலி நினைவு கூர்த்தார்.

பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் பொன்னாடைகளும் நினைவுப்பரிசுகளும் சிறப்பு விருந்தினர் ராமலிங்கத்திற்கு வழங்கப்பட்டது. வானலை வளர்தமிழ் சார்பில் கவிஞர் ஜியாவுதீன் பொன்னாடை அணிவிக்க, கவிஞர் கீழைராசா நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை குத்தாலம் அஸ்ரப் மற்றும் கவிஞர் காவிரிமைந்தன் ஆகியோர் தொகுத்து அளித்தனர்.

நம்பிக்கை சிறப்பிதழின் முதல் பிரதியை ராமலிங்கம் வெளியிட லிங்கண்ணன் பெற்று கொண்டார். இரண்டாம் பிரதியை கோவிந்தராஜ் வெளியிட நாகராஜ் பெற்று கொண்டார். அதேபோல மூன்றாம் இதழை மோகன் வெளியிட, பட்டணம் மணி பெற்று கொண்டார்.

வானலை வளர்தமிழ் அமைப்பிற்காக தொலைநகல்(பேக்ஸ்) கருவியை கோவிந்தராஜ் வழங்க அமைப்பின் பொதுச்செயலாளர் சிம்மபாரதி பெற்று கொண்டார். மரபு கவிஞர் அதிரை கவியன்பன் கலாம், தமிழ்த்தேர் சார்பில் சான்றிதழை ராமலிங்கம் வழங்கினார்.

நவம்பர் மாத தலைப்புகளாக ‘தாலாட்டு' மற்றும் ‘மை' அறிவிக்கப்பட்டது. சிம்மபாரதியின் நன்றியுரை உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிந்தராஜ், குத்தாலம் அஸ்ரப், காவிரிமைந்தன், சிம்மபாரதி, கீழைராசா, ஜியாவுதீன் மற்றும் ஆதிபழனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+