அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிகழ்ச்சியில் வேலூர் எம்.பி.
நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.
காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயளாலர் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் அபுதாபி மண்டல புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டையை
காயிதே மில்லத் பேரவையின் புரவலர்கள் நோபள் மரைன் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது, பனியாஸ் குழுமத்தின் நிறுவன அதிபர் அல்ஹாஜ் அப்துல் ஹமீத் மரைக்காயர் மற்றும் அமீரக காயிதே மில்ல்த பேரவையின் துணைத்தலைவர் வழக்கறிஞர் இஜாஜ் பெய்க் உள்ளிட்டோரிடம் வழங்கினார்.
அமீரக காயிதே மில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத், மக்கள் தொடர்புச் செயளாலர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, மேலப்பாளையம் அப்துல் ரஹ்மான், கொள்ளுமேடு ஏ.முஹம்மது ஹாரிஸ், திருமங்கலக்குடி அன்சாரி, முஹம்மது அப்பாஸ், ஏ.எஸ்.அஹமத், துபாய் மக்கள் தொடர்பு செயலாளர் ஹமீது யாசின், தணிக்கையாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன், தேரா பகுதி செயலாளர் ராஜாஜி காஸிம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications