தீபாவளி வந்தாச்சு…. வீட்டுக்காரர் கிட்ட என்ன கேட்டு வாங்கலாம்?
தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் என உற்சாகம் களை கட்டும். அதுவும் கை நிறைய சம்பளமும், கூடுதலாக போனசும் கிடைக்கும். இந்த நேரத்தில் கணவரின் பாக்கெட்டில் கைவைத்தால்தான் உண்டு. தீபாவளியை சாக்காக வைத்து இல்லத்தரசிகள் தங்களுக்கென வாங்கிக் கொள்ளும் சில சமாச்சாரங்கள் என்னென்ன சில கணவர்களை கேட்டதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன படியுங்களேன்.

பட்டுப்புடவையேதான் வேணுமா?
என்னதான் டிசைன் டிசைனாக புடவைகள் குவிந்திருந்தாலும் தீபாவளி தினத்தில் பட்டு கட்டுவதில் பெண்களுக்கு இருக்கும் ஆசையே அலாதிதான். அதனால் பெண்களின் முதல் சாய்ஸ் பட்டுப்புடவைதான். அதிலும் டிசைனர் பட்டுதான் செலக்ட் செய்கின்றனராம் அதை தேர்வு செய்வதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் காலம்தான் அதிகம் என்கின்றனர் கணவன்மார்கள்.

நகை வாங்கலாங்க ப்ளீஸ்
சம்பளத்தோடு போனஸ் வந்திருச்சே அப்புறம் என்ன?... இந்த வருஷம் எனக்கு நகை வாங்கிக் கொடுங்களேன் ப்ளீஸ் என்ற அன்பான நச்சரிப்புதான் அதிகம் இருக்கும் என்கின்றனர் சில அப்பாவி கணவர்கள்.

புது செல்போன் வந்திருக்காமே…
ஏங்க... ஏங்க... ஆன்ராய்டு செல்போன் வந்திருக்காமே தீபாவளிக்கு எனக்கு எனக்கு அது வாங்கித் தர்றீங்களா? என்று மனைவிகள் அப்ளிகேசன் போடுகின்றனராம் ( அவனவன் அன்டராயருக்கே வழி இல்லாம இருக்கான் இதுல உனக்கு ஆன்ராய்டு செல்போன் கேட்குதா? என்று மனசுக்குள் பதில் சொல்கின்றனராம் மனைவிக்குப் பயப்படாத சில கணவர்கள்).

எக்சேஞ்ச் பண்ணிக்கலாமா?
நம்ம வீட்டு டிவி பத்து வருஷமா ஓடிட்டு இருக்கு. இப்பதான் எல்.சி.டி, எல். இ.டின்னு புதுசா புதுசா டிவிகள் வருதே பழைய டிவியை எக்சேஞ்ச் பண்ணிட்டு புதுசு வாங்கிரலாங்க... என்பார்கள் சிலர். ( இதே மாதிரி மனைவியை எக்சேஞ்ச் பண்ற ஸ்கீம் இருந்தா எப்படி நல்லா இருக்கும் என்பது கணவர்களின் மைன்ட் வாய்ஸ்)

எனக்கே… எனக்கா…
என்னங்க... என்னங்க... நீங்க இந்த தீபாவளிக்கு என்ன எடுத்துக்கிறீங்க? நான் சேத்து வச்ச காசில இருந்து உங்களுக்கு டிரஸ் எடுத்து தரட்டா என்று மனைவிகள் கேட்டால் போதும் அதிலேயே குளிர்ந்து போகும் கணவர்கள் அப்புறம் மனைவியின் அப்ளிகேசனுக்கு எல்லாம் அப்பீலே இல்லை என்று கூறி ஓகே சொல்லிவிடுவார்கள்.

தீபாவளி வசிய லேகியம்…
தீபாவளி முடிந்த பிறகு பேங்க் பேலன்ஸ் பார்க்கும் போதுதான் தெரியும் மனைவி கொடுத்த தீபாவளி வசிய லேகியத்திற்கு எத்தனை ஆயிரம் களவு போயிருக்கிறது என்று. அப்புறம் என்ன அடுத்த தீபாவளி வரை காத்திருக்க வேண்டியதுதான் அப்பாவிக் கணவர்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications