என் வெப்பம் உன்னை அமைதிப்படுத்தட்டும்...!

காதல் உணர்வுகளுக்கு எப்போதுமே தனித்துவம் உண்டு. ஒவ்வொரு உணர்விலிருந்தும் இந்த காதல் உணர்வு எப்போதுமே தனித்துத் தெரியும்..இந்த காதல் உணர்வு இருக்கிறது பாருங்க, ரொம்ப அழகானது, க்யூட்டானது, சில்லென விண்ணிலிருந்து பூமி நோக்கி வீழ்ந்து வரும் மழைத்துளி போல ஜில்லிட வைப்பது.
உன் முகத்தில் பட்டுத் தெறித்தது மழைத் துளி..
தலை தொட்டு முகம் தடவி
இதயம் நுழைந்து
நீ நடுங்கியபோது
என் வெப்பம் வந்து உன்னை அமைதிப்படுத்தும்...
என்னை உணர்ந்து கொள்
உள்ளுக்குள் வெம்மையாக உணர்வாய்...
மனசுக்குப் புத்துணர்ச்சி தருவதே இந்த சந்தோஷ உணர்வுகள்தான். அதிலும் காதல் உணர்வுகள் தரும் சந்தோஷம், உத்வேகம், உற்சாகம் இருக்கிறதே.. அதற்கு இணை என்று எதையும் சொல்வது கடினம்...
உன் உதடு தொட்டு
என் உதடுகள் பேசியபோது
உன் உள் மனசை அறிந்தேன்
உன் ஆத்மாவையும் புரிந்தேன்.
ஆத்மாக்களின் சந்திப்பு அடிக்கடி நடக்கட்டும்...
சந்தோஷமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும் சரி.. காதல் நினைவுகள் நம்மை புதுப்பித்து புல்லட் வேகத்தில் பாய்ந்து பறக்க தூண்டி விடும். ஒவ்வொரு சின்ன நினைவும் எவரெஸ்ட் குளிர்ச்சியை உள்ளுக்குள் பரப்பி நிற்கும்.
முகம் பார்த்து நேரம் போனது தெரியாமல் படுத்திருந்த நிமிடங்கள்.. மனம் முழுக்க நினைவுகளுடன் கால் போன பாதையில் நடந்து போன நிமிடங்கள்... வைத்த கண் எடுக்காமல் காதல் துணையின் கண் பார்த்து காலம் கழிந்த நிமிடங்கள்.. எவ்வளவு அழகான சின்னச் சின்ன சந்தோஷங்கள்...
தலை கோதி விட்ட சந்தோஷம், மடி மீது படுத்திருந்த சந்தோஷம், மன வானில் உற்சாகமாக கை கோர்த்து பறந்து திரிந்த சந்தோஷம்.. சின்ன நினைவுகளும் பெரிய சந்தோஷத்திற்கான விதைதானே...
காதல் தந்த நினைவுகள், உள்ளுக்குள் கால் பரப்பி விஸ்வரூபமாய் விரிந்து நிற்கும்போது, 100 வேலைகள் கொடுத்தாலும் 100 செகன்ட்டில் செய்து முடித்து சிரிக்கலாம்தானே...!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications