மூன்று வயது குழந்தையின் அபார சாதனை... இயக்குநர் பிரபு சாலமன் பாராட்டு!
சென்னை: ஒரே நிமிடத்தில் 83 அறிவியல் கண்டுபிடிப்பாளர் பெயரைச் சொல்லியும், 3.20 நிமிடங்களில் உலக வரைபடப் புதிருக்கு விடைகண்டும், புதிய சாதனை படைத்துள்ளான் 3 வயது சிறுவன்.
சென்னை கேகே நகரைச் சேர்ந்த கல்யாண் குமார் - லீலா வந்தினி தம்பதியின் மகன் கேஎல் தீரஜ். வயது 3 ஆண்டுகள் 7 மாதம்தான் ஆகிறது. ஆனால் அபார நினைவாற்றல்.
அந்த நினைவாற்றலை சாதனையாக்கும் முயற்சியில் இறங்கினர் பெற்றோர். இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு தீரஜ்ஜின் நினைவாற்றலை பரிசோதிக்கும் விதத்தில், மேடை அமைத்துக் கொடுத்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தினான் தீரஜ். ஒரே நிமிடத்தில் 83 அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒப்பித்து முதல் சாதனையை நிகழ்த்தினார்.அடுத்து 3 நிமிடங்கள் 20 நொடியில் உலக வரைபட புதிருக்கு விடை கண்டுபிடித்தான். இதற்கு முன் இந்தப் புதிரை 4.39 நிமிடங்களில் அவிழ்த்ததே சாதனையாக இருந்தது. இதன் மூலம் உலக வரைபடப் புதிருக்கு மிக மிகக் குறைந்த நேரத்தில் விடைகண்ட சாதனை தீரஜ்ஜுக்கு கிடைத்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு, 2.9 வயதிலிருந்தபோது, மிகக் குறைந்த (2.19 நிமிடங்களில்) நேரத்தில் 215 நாடுகளின் கொடிகளை ஒப்பித்து சாதனை படைத்திருக்கிறான் சிறுவன் தீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவன் தீரஜ் சாதனையை இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் ராஜன், ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!













Click it and Unblock the Notifications