மன அழுத்தம் போக மனசுக்கு பிடிச்சவங்களோட பேசுங்க!

Subscribe to Oneindia Tamil

மனஅழுத்தம் மெல்லக்கொல்லும் நோய். பணிபுரியும் இடங்களில் ஏற்படும் தொந்தரவுகளினால் மன உளைச்சலும், மனஅழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மனஅழுத்தம் காரணமாக சிலருக்கு உடனடி தலைவலியும், காய்ச்சலும் கூட ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளவர்கள் அதை எளிதாக நீக்க சில வழிமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர் படியுங்களேன்.

மனசுக்கு பிடிச்ச பேச்சு

மனசுக்கு பிடிச்ச பேச்சு

மன அழுத்தம் சிக்கலை ஏற்படுத்தும். உடனடி தலைவலியை தரும் எனவே உடனடி நிவாரணம் மனதுக்கு பிடித்த நண்பர்களுடன் பேசுவதுதான். எதைப் பற்றியாவது சில நிமிடங்கள் பேசி சிரியுங்கள். இதனால் மனம் லேசாகும். மூளையில் உற்சாக ஹார்மோன்கள் சுரக்கும் மன அழுத்தம் முடிவுக்கு வரும்.

லேசான உடற்பயிற்சி

லேசான உடற்பயிற்சி

கை, கால்களை அசைத்து மெதுவாக உடற்பயிற்சி செய்யுங்கள். அலுவலக சீட்டில் அமர்ந்து கொண்டே செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகள் உள்ளன அவரை முயற்சி செய்யுங்களேன். தசைகள் ரிலாக்ஸ் ஆவதோடு மன இறுக்கமும் தளரும்.

ஏதாவது ஒரு விசயம் மனதைப் போட்டு அழுத்துவதுதான் சிக்கலுக்கு காரணம். எனவே அதை நீக்க முயற்சிக்க வேண்டும். மனதிற்கு இதமான படங்களை பாருங்கள். இயற்கை காட்சிகள், பனிபடர்ந்த மலைகள், கடற்கரை, பசுமைக் காடுகள் போன்றவைகளை பார்ப்பதன் மூலம் மனம் லேசாகும்.

இதமான இசை

இதமான இசை

இசை எல்லாவிதமான நோய்களையும் போக்கும் அருமையான மருந்து. எனவே மன அழுத்தம் ஏற்பட்டுள்ளவர்கள் ஹெட்போன் மாட்டிக் கொண்டு மனதிற்குப் பிடித்த பாடலைக் கேளுங்களேன். மனஅழுத்தம் ஓடியேப் போகும்.

சின்னதாய் ஒரு வாக்

சின்னதாய் ஒரு வாக்

நடை பயிற்சி மன அழுத்தம் போக்கும். எனவே மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக்க உணர்ந்தால் என்ன வேலை செய்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு வெளியே கொஞ்சம் தூரம் காற்றாட ஒரு வாக்கிங் போய்விட்டு வாருங்கள் மன அழுத்தம் ஓடிப்போகும்.

அன்பான அணைப்பு

அன்பான அணைப்பு

ஆறுதல் தேடும் மனதிற்கு இதமாக மனதிற்கு பிடித்த துணையை 5 நிமிடம் கட்டி அணையுங்கள். மன அழுத்தம் போக்கும் ஹார்மோன்கள் சுரக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+