அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு
அபுதாபி: அபுதாபியில் வசிக்கும் லால்பேட்டை மக்களின் ஒன்றிணைந்த ஜமாஅத்தாக விளங்கும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 19வது பொதுக் குழு கூட்டம் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடந்தது.
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் மெளலவி ஏ.அமீனுல் ஹுஸைன் தலைமை வகித்தார். ஜமாஅத்தின் மூத்த தலைவர் ஹாஜி டி.ஏ.முஹம்மது ஹஸன், துணைத் தலைவர் எம்.ஜாஃபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கமாக மெளலவி முஜ்ஜம்மில் மன்பஈ கிராஅத் ஓதினார்.

ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.யாசிர் அரஃபாத் அலி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கையை தாக்கல் செய்தார். ஜமாஅத் பொருளாளர் முஹம்மது இலியாஸ் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். தணிக்கையாளர் அப்துல் மாலிக் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்தார்.
செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ஜமாத்தின் செயல்பாடுள் தொய்வின்றி நடைபெற அனைவர்களது ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து அடுத்த இரண்டு (2013-2014) ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வை முன்னாள் தலைவர்கள்
முஹம்மது ஹஸன், மெளலவி அமீனுல் ஹுஸைன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
கீழ்கண்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: எம்.ஷுஹைபுத்தீன்
துணைத் தலைவர்கள்: பி.ஹெச்.முஹம்மது ஆதம், ஹாஜி எஸ்.ஏ.முஹம்மது தைய்யூப், ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ்
பொதுச் செயலாளர்: எம்.அக்பர் அலி
பொருளாளர்: ஏ.ஹெச். நஜீர் அஹமது
துணைப் பொருளாளர்: ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்
அபுதாபி செயலாளர்கள்:
எம்.அப்துல் ஹாதி
என்.ஏ.சிராஜுத்தீன்
எம்.ஜாஃபர் அலி
எஸ்.ஏ.ரஃபி அஹமத்
முஸ்ஸப்பாஹ் செயலாளர்: சாதிக் பாஷா
அல் அய்ன் செயலாளர்: ஓ.பி.ஜெ. நூருல் அமீன்
தணிக்கையாளர் : ஜெ.ஃபத்தஹுல்லாஹ்
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. மறைந்த அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் ஸ்தாபக உறுப்பினரும், ஜமாஅத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவரின் மஃக்பிரத்திற்காக இக்கூட்டம் துஆ செய்கிறது.
2. ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150வது ஆண்டு விழா மலருக்கு ஒரு பக்கம் ஜமாஅத் சார்பில் விளம்பரம் கொடுக்க இக்கூட்டம்
ஒப்புதல் அளிக்கிறது.
3. அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 20வது ஆண்டை முன்னிட்டு அடுத்த வருடத்தில் சிறப்பு மலர் ஒன்றை வெளியிடவும் இப்பொதுக் குழு அங்கீகாரம் வழங்குகிறது.
4. நமதூர் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150வது ஆண்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துவதோடு, நமதூர் மதரஸவின் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுகோள் வைப்பது மற்றும் ஊரில் மார்க்கப் பணியாற்றும் ஆலிம்களின் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட ஆவண செய்ய வேண்டி வலியுறுத்துவது என தீர்மானிக்கிறது.
இறுதியாக மறைந்த முன்னாள் தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் பாய் அவர்களுக்காக யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது.
பொதுச் செயலாளர் எம்.அக்பர் அலி நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications