துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் முன்னாள் செயலாளர் எமிரேட்ஸ் அப்துல் லத்தீப் அவர்களுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி 16.06.2013 அன்று மாலை அஸ்கான் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுதீன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், ஈமான் அமைப்பு துவங்கப்பட்டது குறித்தும், அதன் மூலம் ஆரம்ப காலத்தில் தமிழ் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்ட விதம் குறித்த கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். விழாக் குழு இணைச்செயலாளர் முஹைதீன் வரவேற்புரையாற்றினார்.

எமிரேட்ஸ் நிறுவனத்தில் 27 ஆண்டு காலம் பணிபுரிந்து பணிநிறைவு பெற்று தாயகம் செல்லும் அப்துல் லத்தீப் அங்கும் சமுதாயப் பணிகள் ஆற்ற வேண்டும் என வலியுறுத்தி ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், ஆடிட்டர் திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஈமான் அமைப்பின் சார்பில் நினைவுப் பரிசினை தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் அப்துல் லத்தீப் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
மேல்விஷாரம் முஸ்லிம் கல்விக் கழகத்தின் துணை தலைவர் எஸ்.இசட். இப்திகார் அஹமது அவர்களின் கல்விச் சேவையினைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்விப்பணிகளுக்கு தமது அமைப்பின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்றார்.
அப்துல் லத்தீப் தனது ஏற்புரையில் ஈமான் அமைப்பு தன்னை கௌரவப்படுத்தியமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஈமான் அமைப்பின் தற்போதைய நிர்வாகக் குழுவினர் இன்னும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வாழ்த்தி விடைபெற்றார்.
விழாக்குழு செயலாளர் கீழை ஏ ஹமீது யாசின் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு மற்றும் நலத்துறை செயலாளர் திருச்சி ஃபைசுர் ரஹ்மான், கல்விக் குழு செயலாளர் மதுக்கூர் முஹம்மது ஹிதாயத்துல்லா, விழாக் குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications