26ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழா வரும் 26ம் தேதி ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது.
துபாய் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சியினை 26.04.2013 அன்று மாலை 5.30 மணிக்கு ஷார்ஜா ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடத்தவிருப்பதாக பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதன் தெரிவித்துள்ளார்.
சித்திரைத் திருவிழாவினையொட்டி பாட்டு, நடனம் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications