கரகம், பரதம், பாட்டு என துபாயில் களைகட்டிய சித்திரைத் திருவிழா
ஷார்ஜா: துபாய் தமிழ்ச் சங்க சித்திரைத் திருவிழா 26.04.2013 அன்று மாலை ஷார்ஜா ரயன் ஸ்டார் சர்வதேச பள்ளியில் வெகு சிறப்புற நடைபெற்றது.
துவக்கமாக அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சித்திரைத் திருவிழாவிற்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சி.ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வர்ணவி மற்றும் ஞானஸ்ரீ ஆகியோர் திருக்குறளை வாசித்து அதன் பொருளை விளக்கினர். ம்ருதுலா இன்று ஒரு தகவல் வழங்கினார்.
தமிழக எழுத்தாளர் இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான் எழுதிய காந்தி போதனை, இளமைப் பருவத்திலே, மரபு, சிறுகை நீட்டி உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள் மற்றும் சிறுகதை நூல்கள் வெளியிடப்பட்டன. முதல் பிரதியினை துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஜெயந்தி மாலா சுரேஷ், குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான் மற்றும் பெட்டினா ஜேம்ஸின் பெற்றோர்கள் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஏற்புரை நிகழ்த்திய எழுத்தாளர் இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான் அவர்கள் துபாய் தமிழ்ச் சங்கம் மேற்கொண்டு வரும் கலை மற்றும் கலாச்சாரப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் தமிழ்க் குழந்தைகள் அனைவரும் தமிழ் மொழியினை கற்பதில் பெற்றோர்கள் உதவிபுரிய வேண்டும் என்றார்.
கிராமிய மணம் கவரும் தஞ்சாவூர் மண்ணெடுத்து உள்ளிட்ட பல்வேறு பாடல்களை கோவிந்தராஜ் மற்றும் குழுவினர், சந்திரா கீதாகிருஷ்ணன், கவிதா பிரசன்னா மற்றும் ரேணுகா ஆகிய ஆசிரியைகளின் குழந்தைகள் பாடல்களையும், நடனத்தையும் வழங்கினர். ஆகாஷ் அருள் கீ போர்டு வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
நிகழ்ச்சியை முஹம்மது தாஹா மற்றும் பெட்டினா ஜேம்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இணைப் பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

பாடும் குயில்கள்
பாட்டு பாடும் சின்னக் குயில்கள்.

மாங்குயிலே பூங்குயிலே
கரகாட்டம் ஆடும் சிறுமிகள்.

டான்ஸ் டான்ஸ்
வண்ணமிகு ஆடையில் சின்னஞ் சிறு மாணவிகளின் நடனம்.

பரதம்
பரதநாட்டியம் ஆடும் சிறுமிகள்.

எங்க டான்ஸ் எப்படி?
பட்டுப்பாவாடையில் கலக்கலாக ஆடும் சிறுமிகள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications