17ல் துபாயில் ஃபோஸ்டா 2013 போட்டிகள்: முதல் பரிசு 8 கிராம் தங்கம், 2வது பரிசு 4 கிராம்

Subscribe to Oneindia Tamil

EIFF's FOSTA 2013 in Dubai on may 17: Don't miss it
துபாய்: துபாயில் எமிரேட்ஸ் இந்தியா பிரடர்னிட்டி ஃபோரம் நடத்தும் ஃபோஸ்டா 2013 என்ற நிகழ்ச்சி வரும் 17ம் தேதி கல்ஃப் மாடல் பள்ளியில் நடைபெறுகிறது.

காலையில் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி, வினாடி வினா, மூன்று நிமிட குறும்படம், ஓவியப் போட்டி, கிளே மாடலிங், கொலாஜ் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 8 கிராம் தங்கமும், இரண்டாவது பரிசாக 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

அன்று மதியம் மாணவ மாணவியருக்கு அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வழி காட்டும் ஏ+ கிரேட் விப்ஜியார் ஆஃப் லைப் என்ற வகுப்பும், பெற்றோர்களுக்கு "சிறந்த முறையில் உங்கள் விடலைப்பருவ குழந்தைகளுடன் நடந்துகொள்வது எப்படி?" என்ற டீனேஜ் பேரண்டிங் வகுப்பும் நடத்தப்படும்.

போட்டிகளில் மாணவர்கள் வரையும் ஓவியங்கள், செய்யும் கிளே மாடல்கள் மற்றும் கொலாஜ் ஆகிய படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படும். மாலையில் மாணவ மாணவியரை முன்னேற்றும் வழிகாட்டியான கெரியர் கைடன்ஸ் கவுன்சிலிங் நடத்தப்படும். இதற்கு தனியாக முன்பதிவு செய்ய வேண்டும்.

அன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறும் மாபெரும் பொது நிகழ்ச்சியில் பிரபல உளவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன் சிறப்புரையாற்றுகிறார். மாலை நேர பொது நிகழ்ச்சியில் வைத்து குழந்தைகளுக்கான பரிசுகள் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள ஒரு மாணவரிடம் இருந்து கட்டணமாக 50 திர்ஹம் வசூலிக்கப்படும்.

போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியருக்கும், பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை http://www.fostaeiff.com/events.html என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பப் படிவங்களை நிரப்பி, ஸ்கேன் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

இது குறித்து மேலும் விபரம் அறிய 055 975 3530 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+