கருவிழி முத்தம் கண்களை குருடாக்கும்! அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

கண்ணின் கருவிழியில் முத்தமிட்டால் அது கண்களை குருடாக்கிவிடும் என்று எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள். கருவிழிகளை சுவைப்பதன் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு கண்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றன.

தற்போது பெரும்பாலான காதலர்கள் தங்களது கண்களுக்குள் ஒவ்வொருவர் மாற்றி மாற்றி சுவைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

கண்களின் கருவிழிகளை முத்தமிடும் இவ் வினோத பழக்க வழக்கமானது ‘Oculolinctus' என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் பாலியல் ரீதியிலாக உச்சத்தை அடைவதாக நம்பப்படுகின்றது.

ஜப்பான் கலாச்சாரம்

ஜப்பான் கலாச்சாரம்

ஜப்பானில் இந்த பழக்க வழக்கம் ஒருவித காதல் கலாசாரமாகவே மாறியுள்ளது.பெரும்பான்மையான இளம் வயது காதலர்களிடையே இது மிகவும் பிரபலமாகியுள்ளது.

பாதிப்பு அதிகம்

பாதிப்பு அதிகம்

இப்போது ஓரின பாலினத்தினரிடையேயும் இந்தப் பழக்கம் அதிகரித்துள்ளது. ரொமான்ஸுக்காக செய்யும் இந்த ‘கிஸ்ஸிங்' மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கண்களில் நோய் தொற்று

கண்களில் நோய் தொற்று

இந்த விநோத பழக்கத்தின் காரணமாக நிறைய ஜோடிகளின் கண்களில் தொற்று நோய்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் சில வேளைகளில் சிலருக்கு நிரந்தரமாக கண்கள் குருடாகி விடக் கூடிய அபாயமும் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்ர்.

உணர்வுகள் அதிகம்

உணர்வுகள் அதிகம்

விழி வெண்படலமானது நரம்புகள் மிக்க, உணர்வு கூடிய பகுதி என்பதால் இதனை நக்கும் போது வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது. ஆனால், இப்படி செய்வதால் எளிதாக பாக்டீரியா கடத்தப்படுவதால் கண்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

விநோத முத்தம்

விநோத முத்தம்

இவ் விநோத முத்தம் ஜப்பானில் மட்டுமன்றி பல நாடுகளில் நீண்ட காலமாக பழக்கத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. அத்துடன் இது தொடர்பான பல விஷயங்கள் சமூக வலையமைப்புகளில் பரவிக் கிடப்பதால் பலர் இதை முயன்று பார்ப்பதாகவும் இதனாலேயே நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+