ஃபுஜைராவில் நகைச்சுவை டிவிடி ரிலீஸ்
Subscribe to Oneindia Tamil
ஃபுஜைரா: ஃபுஜைரா தமிழ் மன்றத்தில் நகைச்சுவை குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி 01.02.2012 அன்று மாலை தர்பார் உணவகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஃபுஜைரா தமிழ் மன்ற தலைவர் அதிரை ரமேஷ் தலைமை வகித்தார். நகைச்சுவை குறுந்தகடை நகைச்சுவை பேரரசு தேவகோட்டை ராமநாதன் வெளியிட முதல் பிரதியினை அஹமது ஜலீல் பெற்றுக் கொண்டார்.
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் எனும் வாசகத்தின் அடிப்படையில் நகைச்சுவைக் குறுந்தகடு தயாரிக்கப்பட்டு உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பார்த்து நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் எனும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ளது என்றார் ராமநாதன்.
நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன், வெற்றிவேல், தமீம் அன்சாரி, உமா மகேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications