செல்போனில் அதிகம் பேசினால் புற்றுநோய் ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்
ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்ற பழமொழி போய் இப்போது செல் இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறும் அளவிற்கு புது மொழி வந்து விட்டது.
மனிதனின் ஆறாவது விரலைப் போல செல்போனும் ஒரு அங்கமாகி வரும் வேலையில் அதிகம் செல்போன் பேசினால் புற்றுநோய் பாதிப்பு வரும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் ஏற்படும் பற்றி இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர் அதில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் தெரியவந்தன.

காது சுரப்பி அடியாகுமாம்
செல்போன் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சில் பரிசோதனை
இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

ரொம்ப பேசுனா கேன்சர்தான்
அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது. அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

செல்போன் டிரைவிங்
ஒரு சிலர் சாலையில் வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுகின்றனர். அவர்களின் கவனம் சாலையில் இருப்பதில்லை. இதுவும் உயிருக்கு ஆபத்தானதாக முடிகிறது.

செல்போனால் செத்தவர்கள்
அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கடந்த 2011ம் ஆண்டு செல்போன் பேசியதன் மூலம் 3,331 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுவே 2010ம் ஆண்டு 3,267 பேர் கொல்லப்பட்டனர். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. எனவே தகவல் தொடர்புக்காக கண்டறியப்பட்ட ஒரு சாதனம் உயிருக்கு உலை வைக்கும் எமனாக மாறியுள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications