’ஆடுங்கள் ஆனந்தமாக....’ இன்று உலக நடன தினம் - ஏப்ரல் 29
சென்னை: உலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் தேதி, உலக நடன தினமாக (World Dance Day, April 29) கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அத்தகைய நடனக் கால்களை கவுரவிக்கும் விதமாக உலக நடன நாள் கொண்டாடப்படுகிறது.
தங்களின் நடன அசைவுகள் மூலம் உலகை தன் கைக்குள் வைத்திருந்த பிரபலங்கள் பலர். நடனங்கள் பல வகைப்படும்.

தெய்வம் தந்த கலை...
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நடனக் கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், தெய்வீகத் தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகிறது.

நடன நாளின் இலக்கு...
பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவை அதிகரிக்கச் செய்வதுடன் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதுடன் முறையான நடனக் கல்வியை ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் சர்வதேச நடன தினத்தின் முக்கிய இலக்காக இருக்கிறது.

சர்வதேச நடனசபை...
கடந்த 1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003 ஆம் ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

நடனம் நாட்டின் குறியீடு...
நடனம் என்பது போது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உதாரணமாக பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகிறது. இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாக இருக்கிறது.

முகப்பாவனை நடனம்...
நன்கு தேர்ச்சி பெற்ற பரத நாட்டியக் கலைஞரின் முக பாவனையில் நவ ரசங்களின் பாவனைகளையும் பார்க்கலாம். ஆனால் மேற்கத்தேய நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலே (மேற்கத்திய மரபு நடனம்), டிஸ்கோ, சல்சா, போல்கா, லம்பாடா, லிம்போ போன்ற நடனங்களில் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளைக் காண்பது அரிது.

கிராமிய நடனங்கள்...
கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு. இந்தியாவின் கிராமிய நடனங்களை பின்வருமாறு பிரிக்கலாம்.

தெற்கு இந்தியக் கிராமிய நடனங்கள்...
தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் இலவா மற்றும் நிக்கோபாரிய நடனம்

வடக்கு இந்தியக் கிராமிய நடனங்கள்...
டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி .

கிழக்கு இந்தியக் கிராமிய நடனங்கள்...
நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய்.

மேற்கு இந்திய நடனங்கள்...
கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ

வருத்தம்...
நடன தினம் பற்றிய செய்தியை வெளியிட்ட சர்வதேச நடன சபையின் தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் ‘உலகிலுள்ள 200 நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடனத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்...
பொதுவாக, அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் நடனக் கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதுமில்லை. மேலும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியான நடனக் கல்விக்கு அரச நிதி உதவிகள் கிடைப்பதில்லை" என்று வருத்தப்பட்டிருந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications