'லேப்' 'டாப்'ல வச்சு யூஸ் பண்ணதீங்க... தோல் வெந்து போயிடும்! எச்சரிக்கை ரிப்போர்ட்
லேப் டாப் உபயோகிப்பவர்கள் அதனை மடிமீது வைத்து உபயோகித்தால் தோல் வெந்து போய் விடும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.
நிறச்சிதைவு நோய் ஏற்படுவதோடு அலர்ஜியை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தற்போது இளைய தலைமுறையினரின் பெரும்பாலான நேரம் லேப்டாப்பில்தான் செலவாகிறது. மடியின் மீது லேப்டாப்பை வைத்து உபயோகிக்கின்றனர். இப்படி லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு நிறச்சிதைவு நோய் அதிகம் தாக்கும் ஆபத்து உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
எனினும் மடியின் மேல் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரைமணி நேரத்துக்கு மேல் வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

லேப் டாப் கொப்புளங்கள்
லேப்டாப்பில் இருந்து வெளி வரும் வெப்பத்தால் தொடையின் தோல்பகுதி சிவந்து போகும். பிறகு அந்த இடத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகி அரிப்பு ஏற்படும்.

அலர்ஜி ஏற்படும்
லேப்டாப்பில் காரீயம் சேர்த்திருப்பார்கள். அதிக நச்சுத்தன்மை நிறைந்த இந்த தனிமம் உடலுக்கு பல ஆபத்துகளை உருவாக்கும். கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்ற அலர்ஜியை உருவாக்கும். இதனால் கொப்புளம், அரிப்பு, தோல் தடிப்பு போன்ற நோய்கள் வரும்.

வெந்து போகும் சருமம்
அரிப்பு உள்ள இடத்தை சொரியச் சொரிய அந்த இடத்தில் தோலின் நிறம் மாறி, தடித்த கறுப்பாகிவிடும். இதனை ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்' என்று அழைக்கின்றனர் நிபுணர்கள்.

கண்ணில் கருவளையம்
லேப்டாப்பை தொடர்ச்சியாக அருகில் வைத்து பார்ப்பதால் கண்ணுக்கு அடியில் ரத்த ஓட்டம் குறைந்து, கருவளையம் நிரந்தரமாகத் தங்கிவிடும்.

கூலிங் பேடு உபயோகிங்க
துணி, தலையணை, பிளாஸ்டிக் பொருட்களின் மீதும் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துவது ஆபத்தானது. லேப்டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த இப்போது சிறிய ஃபேன் கொண்ட ‘கூலிங் பேடு' உபகரணங்கள் வந்துவிட்டன.

குழந்தைகள் ஜாக்கிரதை
குழந்தைகளிடம் இருந்து லேப்டாப்பை சற்று தள்ளியே வைத்திருங்கள். ஏனெனில் இதன் வெப்பம் குழந்தைகளை எளிதில் தாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications