துபாயில் நடந்த மீலாத் பேச்சுப் போட்டி

நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார். விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து போட்டியின் விதிமுறைகளை விளக்கிக் கூறினார். நிகழ்வின் அறிமுகவுரையினை கோட்டாறு சாதிக் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் பங்கேற்றார். புரவலர் அல்ஹாஜ் ஷேக் தாவூது காக்கா வாழ்த்துரை வழங்கினார்.
முதல் பரிசாக ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கிய விமான டிக்கட்டை ஈடிஏ பெனாசிர் பாத்திமாவும், இரண்டாவது பரிசாக அரேபியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் வழங்கிய கலர் டிவியினை ஜெஸிலா பானுவும், மூன்றாம் பரிசாக லேண்ட்மார்க் நிறுவனம் வழங்கிய தங்க காசை ரஸீம் ஆகியோரும் பெற்றனர்.
அல் ஹஸீனா நிறுவனம் வழங்கிய ஆறுதல் பரிசுகளை ஹபிபுல்லா, இஸ்ரத் ஃபரிதா, முஹம்மது இப்ராஹிம், சுபான், ரஃபிக் சுலைமான், மெரிட்கான் முஸ்தபா, ராஜி ராஜேந்திரன் ஆகியோரும், மஸ்ரிக் இன்டர்னேஷனல் வழங்கிய ஜெனார்ட் கைக்கடிகாரத்தினை முஹம்மது இப்ராஹிம், முஹம்மது இக்பால், நபிலா ஃபைஜியா, விருதை மு. சையது ஹுசைன், நஸ்ருதீன், முஹம்மது ஹாஜா கமாலுதீன், மோனா முஹம்மது அன்வர் மற்றும் அபுபக்கர் சித்தீக் ஆகியோரும் பெற்றனர்.
போட்டியின் நடுவர்களாக அய்மான் அமைப்பின் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சியின் பயிற்சியாளர் தஞ்சை ஜலாலுதீன், உடன்குடி மௌலவி ஹாபிஸ் அப்ஸலுல் உலமா குத்புதீன் ஆலிம் சதக்கி ஆகியோர் பங்கேற்றனர்.
மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முஹைதீன், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, ஃபைஜுர் ரஹ்மான், சாதிக் பாட்சா, வி களத்தூர் ஷாகுல் ஹமீது, வி களத்தூர் ஷர்புதீன், முபாரக் அலி, சலாஹுதீன், மணமேல்குடி அம்ஜத்கான், தமீம் அன்சாரி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications