ஸ்டாலின் பிறந்தநாள்: அஜ்மானில் மார்ச் 1ல் ரத்ததானம், கவிச்சங்கமம்
அஜ்மான்: ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பு 61வது பிறந்த நாள் காணும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையொட்டி மார்ச் 1ம் தேதி காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை இந்தியச் சங்க வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட இருப்பதாக நிறுவனத் தலைவர் முனைவர் ஏ.எஸ். மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மாலை 6 மணிக்கு பிறந்த நாள் விழாவில் 61 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளாக கவிச்சங்கமம், மு.க.ஸ்டாலின் பற்றிய இசைப்பாடல்கள், பட்டிமன்றம், வாழ்த்துரைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, சிவ்ஸ்டார் பவனின் இனிய விருந்து உபச்சாரம் இடம்பெறும்.
இந்திய சங்கத் தலைவர் ஜனாப் அஹமது கான் வரவேற்புரையாற்றுகிறார். அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி நிகழ்வுரையாற்ற, மெட்ரோ மெடிக்கல் சென்டர் அஜ்மான் டாக்டர் ஜமால்தீன் அபுபக்கர் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரி அசோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். சிவ்ஸ்டார் பவன் உரிமையாளர் எல்.கோவிந்தராஜ் நிறைவுரை ஆற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications