அபுதாபி அய்மான் சங்க கல்வி பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் சர்பிரைஸ்

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். சமுதாயப் புரவலர் நோபிள் மரைன் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ். ஷாஹுல் ஹமீத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக லால்பேட்டை ஹாபிழ். இர்ஷாத் அஹமத் இறைமறை வசனங்கள் ஓதினார்.
அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
உணர்வாய் உன்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜலால், அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ரெஜினால்டு, கவிஞர் கூரியூர் குத்புத்தீன் ஐபக், காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழக கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் அல்ஹாஜ். எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சமுதாய மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம் குறித்து சிறப்பாக விவரித்தார்.
அய்மான் சங்கம் சார்பில் "அய்மான் கர்ளன் ஹஸனா" (அய்மான் அழகிய கடன் திட்டம்) இந்நிகழ்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டது. இறைவனின் பேரருளால் இந்த நிகழ்ச்சியின் மூலம் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு செயல்வடிவமும் பெற்றுவிட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இத்திட்டத்தில் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டு அவர்களின் பங்களிப்பையும் வழங்கி சிறப்பான அடித்தளமிட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை, கீழக்கரை, காயல்பட்டினம், லால்பேட்டை, அதிராம்பட்டிணம், ஆடுதுறை, நீடூர், திருவாடுதுறை, நெல்லை, வி.களத்தூர், தேவிபட்டிணம், அழகன்குளம், கொள்ளுமேடு, மானியம் ஆடூர், களமருதூர், ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் ஜமாஅத் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் திரு. நாஞ்சில் சம்பத் (அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்) திடீர் வருகை தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் எஸ்.எ.ஹிதாயத்துல்லாஹ்விற்கு அய்மான் சங்க பொருளாளர் கீழை முஹம்மது ஜமாலுத்தீனும், திரு.நாஞ்சில் சம்பத்திற்கு அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் சையத் ஜாஃபர் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
இறுதியாக அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்மான் சங்க நிர்வாகிகள் களமருதூர் ஷர்ஃபுத்தீன்,திருவாடுதுறை அன்சாரி பாஷா, மானியம் ஆடூர் குத்புத்தீன் ஹாஜியார், யூஸுஃப் பக்ஷ், முஹம்மது ஹாரிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications