ஷார்ஜாவில் நகரத்தார் சங்க கலந்துரையாடல்: பேரரசு குடும்பத்துடன் பங்கேற்ப்பு
ஷார்ஜா: ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 147வது கலந்துரையாடல் நிகழ்ச்சி 26.04.2013 அன்று காலை ஷார்ஜா நகரத்தார் பண்ணை இல்லத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தலைவர் ரமேஷ் ராமநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முத்துராமன் கதிரேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். துவக்கமாக இறைவணக்கப்பாடல் மற்றும் சங்கப்பாடல் ஆகியன பாடப்பட்டன. திருக்குறள் வாசித்து அதன் விளக்கம் விவரிக்கப்பட்டது. செல்வி மெய்யம்மை வள்ளியப்பனின் 1960 குறித்த அறிமுக நடனம் இடம் பெற்றது.
147வது கலந்துரையாடல் நிகழ்ச்சி 1960ம் ஆண்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் பலரும் தங்களது கடந்த கால வாழ்வினை நினைவு கூறும் விதத்தில் அமைந்திருந்தது. பெரும்பாலோர் 1960ம் ஆண்டில் இருப்பது போல் உடையணிந்து வந்தனர். அவர்களில் சிறப்புற உடையணிந்திருந்தோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் பேரரசு தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். தனது இளைமைக்கால வாழ்வு குறித்தும், தான் பிறந்த நாட்டரசன் கோட்டையில் நகரத்தாரின் சமுதாயப் பணிகள் குறித்தும் நினைவு கூர்ந்தார். தனது வாழ்வில் முதன் முதலாக பயணித்த வாகனம் ஒரு நகரத்தாரின் அம்பாஸிடர் கார் எனக் குறிப்பிட்டார். அமீரகத்தில் நகரத்தார் சங்கத்தினர் மேற்கொண்டு வரும் சமுதாயப் பணிகளைப் பாராட்டினார்.
சென்னை பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான கவிஞர் காவிரிமைந்தன் இசையும் பாடலும் எனும் தலைப்பில் வீடியோ மூலம் பாடல்களை ஒளிபரப்பி அதன் குறிப்புகளை விவரித்தார். பாடல்கள் எழுதப்பட்ட சூழல் உள்ளிட்டவற்றை விளக்கிய விதம் பலருக்கும் பல்வேறு புதிய செய்திகளைத் தருவதாய் அமைந்திருந்தது. கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் அனைவரும் தன்னோடு இணைந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஆச்சிகளுக்கான சமையல் போட்டி, ராஜகணேஷ் ராமநாதன் வடிவமைத்த மாத்தியோசி விளையாட்டு நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சி, சிதம்பரம் மற்றும் நாச்சியப்பன் ஆகியோரால் வினாடி வினா போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு இயக்குநர் பேரரசு பரிகளை வழங்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை நிர்வாகக் குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.

குடும்பத்தாருடன் பேரரசு
நகரத்தார் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.

பேரரசு
நகரத்தார் கூட்டமைப்பினருடன் பேரரசு.

பரிசளிப்பு
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் பேரரசு.

மனைவியுடன்
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மனைவியுடன் சேர்ந்து பரிசளிக்கும் பேரரசு.

கெட்டப் எப்பூடி?
இந்த கெட்டப்பில் நாங்கள் எல்லாம் எப்படி இருக்கிறோம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications