காலை நேர காதல்!…. கண்ணத்தில் செல்லமாய் ஒரு முத்தம்!!

Subscribe to Oneindia Tamil

அதிகாலை விடியல் எல்லோருக்குமோ அமைதியாக அமைந்து விடாது... சோர்வும் எரிச்சலும் கலந்த கலவையாய் இருக்கும். சில சமயம் அலுப்பும் அசதியுமாய் இருக்கும்.

எப்படி இருந்தாலும் பணிச்சுமை... அதன் துரத்தல்களால் கண்விழித்துதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை எழுந்தாகவேண்டுமே பக்கத்தில் துணையிருந்தால் கொஞ்சம் ரொமான்ஸ் உடன் காலை நேரத்தை தொடங்கலாம்.

சின்னதாய் ஒரு முத்தம்... செல்லமாய் சில கொஞ்சல்கள் என காலை நேரத்தை தொடங்கினால் அலுப்பும் சலிப்பும் இருந்த இடமே தெரியாது காணாமல் போய்விடும். அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம் என்கின்றனர் நிபுணர்கள் படியுங்களேன்.

காதோரம் கிசுகிசுப்பாய்….

காதோரம் கிசுகிசுப்பாய்….

வாரத்தின் முதல்நாள் வேலைக்கு மட்டம் போட முடியாதே ஞாயிறு இரவு நேரம் கழித்து உறங்கியதில் கொஞ்சம் அசதி அதிகமாகத்தான் இருக்கும் ஆனாலும் காதோரம் வந்து கொஞ்சலாய்... கிசுகிசுப்பாய் குட்மார்னிங் சொல்லி எழுப்புங்களேன்.

மீசை குத்தாமல் ஒரு முத்தம்

மீசை குத்தாமல் ஒரு முத்தம்

கணவரின் மீசையும், தாடியும் கண்ணத்தில் குத்துவது கூட ஒரு சுகம்தான் ஆனாலும் அதிகாலை நேரத்தில் எழுப்பும் போது செல்லமாய் நெற்றியில் ஒரு முத்தமிட்டு எழுப்புங்களேன். அப்புறம் சுறுசுறுப்பாய் எழுந்த உங்கள் மனைவி சூடாய் ஒரு கப் காபியோடு உங்களைத் தேடி வருவார்

கையோடு கைகோர்த்து

கையோடு கைகோர்த்து

விழிப்பு வந்து விட்டது படுக்கையை விட்டு எழ மனமில்லை. பக்கத்தில் அழகாய் மனைவி படுத்திருக்க எழுப்பியாக வேண்டுமே. கையோடு கைகோர்த்து செல்லமாய் விளையாடுங்கள். அந்த சரசமே அவரை கண்விழிக்க வைத்துவிடும்.

பனிக்கட்டியின் ஸ்பரிசம்

பனிக்கட்டியின் ஸ்பரிசம்

ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் க்யூப்பை எடுத்து கர்ச்சிப்பில் கட்டி மெதுவாய் வந்து கண்களின் மீது ஒத்தடம் கொடுக்கலாம் குளிர்காலத்தில் இது சரிப்படாது ஆனால் கோடை காலத்தில் சரியான காலை நேர ரொமான்ஸ் விளையாட்டு இது.

லவ் யூ அலாரம்

லவ் யூ அலாரம்

செல்போனிலோ, அலாரம் டைம்பீஸிலோ லவ் யூ பாடலை செட் செய்து காலை நேரத்தில் காதோரம் ஒலிக்கச் சொல்லலாம். அப்புறம் என்ன அன்றைய நாள் முழுவதும் லவ் யூ சத்தம்தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+