தமிழக சிறுவனின் முயற்சியில் சுத்தமான ஷார்ஜா கடற்கரை
ஷார்ஜா: ஷார்ஜா கடற்கரையினை சுத்தப்படுத்தும் பணி 21.06.2013 அன்று காலை 7 மணி முதல் தமிழக சிறுவன் ஏற்படுத்தியுள்ள பசுமை பூகோளம் (Green Globe) எனும் அமைப்பின் மூலம் வெகு சிறப்புற நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் எனும் கடற்கரை நகரைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரின் 13 வயது ஷார்ஜா பள்ளி மாணவன் ஹுமைத் அபுபக்கர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் பசுமை பூகோளம் (Green Globe) எனும் அமைப்பினை ஏற்படுத்தியுள்ளான்.
இவ்வமைப்பின் மூலம் ஷார்ஜா கடற்கரையினை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொள்ள இருப்பதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவித்ததும் அவரது பள்ளித் தோழர்கள் நாடு, இனம், மதம், மொழி என வேறுபாடில்லாது பலரும் தாங்கள் பங்கேற்பதாக உறுதியளித்தனர்.
இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தான், சூடான், பாலஸ்தீனம், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாட்டவரும் வெள்ளிக்கிழமை காலை ஷார்ஜா கடற்கரையில் கூடத் தொடங்கினர்.
இப்பணியில் ஈடுபட அனுமதி கோரி ஷார்ஜா நகரை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பீஅஹ் (Bee'ah) எனும் நிறுவனத்திற்கு விண்ணப்பித்ததும் அவர்கள் மிகவும் பெருமகிழ்வுடன் அனுமதியளித்து ஹுமைத்தின் சுற்றுச்சூழல் பணிக்கு தங்களது அலுவலர் மற்றும் ஊழியர்களை அனுப்பி உதவினர். இப்பணியில் தாங்கள் ஈடுபடுவது மிகவும் மகிழ்வினை அளிப்பதாக ஹிஸாம் எனும் அதிகாரி தெரிவித்தார்.
இந்த பணியின் மூலம் முழுமையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த இயலாவிடினும் தங்களால் இயன்ற அளவு சிறு முயற்சியினை மேற்கொள்வதில் மகிழ்வளிப்பதாக ஹுமைத் அபுபக்கர் தெரிவித்தார். மேலும் அமீரகத்தில் உணவுப் பொருள் அதிகளவில் வீணாவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஹுமைத் தெரிவித்தார். இப்பணிக்கு ஒத்துழைப்பும், ஆதரவும், ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இப்பணியில் ஈடிஏ அஸ்கான் குழுமத்தின் நலத்துறை அலுவலர் அஹமத் சுலைமான், உலக நகைச்சுவையாளர் மன்ற துபாய் கிளை தலைவர் முஹைதீன் பிச்சை, அபுபக்கர், ஹமீத் பிரிண்டிங் பிரஸ் மேலாளர் ஹமீத், முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் முதுவை ஹிதாயத், ஏ.பி.ஹெச். மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி மேலாண்மை இயக்குநர் சஹது, சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு துபாய் ஈடிஏ அஸ்கான் நலத்துறை பிரிவு, ஒன் இந்தியா தட்ஸ்தமிழ்.காம், தினமலர் நாளிதழ், முதுகுளத்தூர்.காம், அல் ரவாபி, ஹமீத் பிரிண்டிங் பிரஸ் உள்ளிட்டவை அணுசரனை வழங்கின.








-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications