வாய்விட்டு பாடுங்க… இதயத்துக்கு ரொம்ப நல்லது
வாய்விட்டு உற்சாகமாக பாட்டு பாடினால் இதயத்துடிப்பு சீராகும். மனஅழுத்தம் போகும் என்று சமீபத்திய ஆய்வு தெரியவந்துள்ளது.
பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு பேசாமலேயே இருந்துவிடுகின்றனர். இதனால் ஒருவித இறுக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்
நாள் முழுவதும் வாயை திறந்து பேசாமல் இருந்தால், வாய் ஒருவித துற்நாற்றம் ஏற்படுவதை நீங்கள் உணர்த்திருக்கிறீர்களா? சிலர் வாயை திறந்து பேசுவதற்கும் தயக்கப்படுவர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்
பரபரப்பாக ஒருவித இயந்திரத்தன்மையுடன் இயங்குவதால் மூளை எப்போதுமே இயக்கத்தில் இருக்கும் எனவே அவ்வப்போது கொஞ்சம் தளர்த்தி ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

வெட்கப்பட வேண்டாம்
எப்போதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் நேரம் ஒதுக்கி மனதை அமைதிப் படுத்துவதே இல்லை. பெரும்பாலானோர் வாயை திறந்து பாடுவதற்கு வெட்கப்படுவர். இதனால் பல நல்ல விசயங்களை இழக்கின்றனர். எனவே வாய் திறந்து பேசவோ பாடவோ வெட்கப்பட வேண்டாம்.

மன அழுத்தம் போகும்
மனதில் உள்ள அழுத்தங்களை போக்க வாயை திறந்து மற்றவர்களிடம் பொது விஷயத்தையோ, நல்ல தகவல்களையோ பரிமாறி கொள்ளலாம். பிறரிடம் பேச வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் நமக்கு பிடித்த நல்ல பாடல்களை பாடலாம்.

புத்துணர்ச்சி கிடைக்கும்
பாட்டுப் பாடுவதன் மூலம், மூளைக்கு செல்லும் நரம்புகளும் புத்துணர்ச்சி அடைந்து உற்சாகம் ஏற்படும். இதய துடிப்பு சீராக துடிக்கும். இதயத்திற்கு செல்லும் நரப்புகளின் இரத்த நாளங்கள் விரிவடைந்து, சரியான விகிதத்தில் இரத்தம் பாயும்.

இறைவணக்கம் நல்லது
எனவே தினந்தோறும் பாடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதயம் நன்றாக இயங்குவதோடு மன அமைதியும் பெறும்.
குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் ஒரே இடத்தில் கூடி இறை வணக்கம் செய்கின்றனர். ஒருங்கிணைந்து பாடும் போது இதயம் சீராக துடித்து, மூளை புத்துணச்சி அடையும் என்பதனால்தான் பள்ளிப் பருவத்திலேயே கற்றுக் கொடுக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications