Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாய்டா...!

Subscribe to Oneindia Tamil

பூ, பூப்பதை பார்த்திருக்கிறீர்களா... மிக மிக அழகான விஷயம் அது. அது போலத்தான் காதலும்.. காதல் பூத்து, வளர்ந்து செழித்து வரும்போது மனசுக்குள் அடி ஆழத்தில் ஒரு உணர்வு பீறிட்டெழும் தெரியுமா... அதை அனுபவிக்கும்போதுதான் அதன் அழகு புரியும்.

காதலே இனிமையானது.. அப்படி இருக்கையில் காதலர்களும் இனிமையாக இருந்தால்தானே இயல்பாக இருக்கும். ஆனால் நிறைய காதலர்களுக்கு எப்போதும் தித்திப்புடன் இனிக்க இனிக்க நடந்து கொள்ளத் தெரியாமல் போய் விடுகிறது. அவ்வப்போது கடுகடுப்புக்கும், விசனத்திற்கும் மாறி விடுகிறார்கள்.

அப்படி இல்லாமல் ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பகலையும், ஒவ்வொரு இரவையும் அழகாக வைத்துக் கொள்ள, இனிமையாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்கள் இங்கே...

மசாஜ் செய்யுங்கள்

மசாஜ் செய்யுங்கள்

காதலிக்கு மசாஜ் செய்வதில் நிறைய அனுகூலங்கள் உள்ளன. இது செக்ஸியான மசாஜ் இல்லை, மாறாக புத்துணர்வூட்ட உதவும், காதல் உணர்வை பெருக்கெடுத்து ஓட விட உதவும் மசாஜ் ஆகும். சின்னச் சின்னதாக கைகளைக் கொண்டு கன்னத்தில், நெற்றியில், தோள்பட்டையில், முதுகில் என்று மசாஜ் செய்யும்போது உங்கள் மீது அதிக பாசம் காட்டுவார் உங்களவர்.

அப்பப்ப வெளில போங்க

அப்பப்ப வெளில போங்க

எப்பவுமே உள்ளேயே இருக்காதீர்கள். அவ்வப்போது வெளியில் செல்லுங்கள். ஒரு காபி கடைக்குப் போய் ஒரு வாய் காபி சாப்பிட்டு வந்தால் கூட போதுமானதே. ஐஸ்கிரீம் பார்லருக்குக் கூட்டிப் போய் ஜில்லென்று வாங்கிக் கொடுங்கள். நல்ல ரிலாக்சேஷனாக இருக்கும்.

உற்சாகப்படுத்திப் பேசுங்கள்

உற்சாகப்படுத்திப் பேசுங்கள்

உங்கள் காதலியிடம் வெறுமனே காதல் மொழி மட்டும் பேச வேண்டும் என்று இல்லை. அவ்வப்போது உற்சாகப்படுத்தியும் பேசலாம். அவருக்குப் பிரச்சினை ஏதாவது இருந்தால் அதற்கு தீர்வு சொல்லி அவரை தைரியப்படுத்துங்கள். தெம்பூட்டுங்கள்.

சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாமே

சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாமே

காதலனும், காதலியுமாக ஜோடியாக சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். இது இருவருக்கும் நல்ல அனுபவமாக இருக்கும். காதல் மூடுடன், ரொமான்ஸ் மூடும் இணைந்து வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

திடீர் பயணங்களை பிளான் பண்ணுங்கள்

திடீர் பயணங்களை பிளான் பண்ணுங்கள்

வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ திடீர் பயணங்களுக்கு ஏற்பாடு செய்து காதலியை அசத்துங்கள். அதுவும் அவருக்குப் பிடித்த இடமாக கூட்டிச் சென்று அவரை சந்தோஷத்தில் குளிப்பாட்டுங்கள்.

ஒவ்வொரு செயலும் ஸ்பெஷலாக...

ஒவ்வொரு செயலும் ஸ்பெஷலாக...

நீங்கள் உங்கள் காதலி விஷயத்தில் செய்யும் ஒவ்வொரு செயலும் ஸ்பெஷலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது அவரால் அவ்வளவு சீக்கீரம் மறக்க முடியாததாக அது இருக்க வேண்டும்.

சின்னச் சின்ன சில்மிஷங்கள்

சின்னச் சின்ன சில்மிஷங்கள்

இருவருமாக சேர்ந்து சின்னச் சின்ன சில்மிஷங்களில் அவ்வப்போது ஈடுபடுவது காதலுக்கு நல்லது. கன்னத்தை கிள்ளுவது, செல்லமாக முத்தமிடுவது, முகத்தோடு முகம் வைத்து உரசிக் கொள்வது, வேடிக்கை காட்டுவது, செல்லமாக ஏமாற்றுவது என அவ்வப்போது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வலுப்படுத்த உதவும்.

நீ என்னவள்...எனக்கானவள்

நீ என்னவள்...எனக்கானவள்

ஒவ்வொரு முறை பேசும்போதும் உங்கள் காதலியை நீங்கள் எந்த அளவுக்கு மதிக்கிறீர்கள், உணர்கிறீர்கள், அவரை விரும்புகிறீர்கள் என்பதை ஆழமாக புரிய வையுங்கள். நீ எனக்கானவள், என்னவள் என்பதை அவருக்கு புரிய வையுங்கள்.

சின்னச் சின்னப் பரிசு

சின்னச் சின்னப் பரிசு

அவ்வப்போது ஏதாவது பரிசளிக்க வேண்டும். அது பெரிதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சின்ன பென்சிலாவது வாங்கிக் கொடுங்க. இல்லாட்டி தலையில் மாட்டும் கிளிப்பாவது வாங்கிக் கொடுங்க.. கொடுக்கும் பொருள் முக்கியமில்லை, கொடுப்பதுதான் முக்கியம்.

சாப்பிட வைத்து அழகு பாருங்க

சாப்பிட வைத்து அழகு பாருங்க

சேர்ந்து போய்அவ்வப்போது சாப்பிடுங்கள். அப்படி சாப்பிடும்போது அவர் சாப்பிடுவதை பார்த்து ரசிப்பதில் முக்கியம் காட்டுங்க. மாறாக வறட் வறட்டென்று நீங்க பாட்டுக்கு வேகமாக சாப்பிடக்கூடாது. அவரை சாப்பிட வைத்து அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை அவருடன் காதலுடன், அன்புடன், பாசத்துடன் பேசியபடி இருப்பது நிறைய பலன் தரும்.

சின்ன அணைப்பு.. பெரிய சந்தோஷம்

சின்ன அணைப்பு.. பெரிய சந்தோஷம்

அவ்வப்போது காதலியை காதலுடன் அணைத்துக்கொள்வதும், நெற்றியில், கன்னத்தில் முத்தம் தருவதும் நல்லது. காதலி விரும்பினால் இதழ் முத்தமும் தரலாம்.

நீதானே என் பொன் வசந்தம்...

நீதானே என் பொன் வசந்தம்...

கவிதை பாடுங்கள், கரத்தோடு கரம் சேர்த்து காதலுடன் பார்த்தபடி இருங்கள்... ஒவ்வொரு நினைவிலும் உன் முகம்தானே பெண்ணே..என்றென்றும் நீதானே என் பொன்வசந்தம் கண்ணே என்று சொல்லுங்கள்...

எந்த நொடியிலும் உனக்காக

எந்த நொடியிலும் உனக்காக

உங்கள் காதலி எந்த உதவி கேட்டாலும் உடனே செய்ய முன்வர வேண்டும். அதற்கேற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும். சின்ன உதவியோ, பெரிய தேவையோ, எதுவாக இருந்தாலும் அவருக்கு தோள் கொடுத்து கரம் கொடுப்பது உங்கள் மீதான பாசத்தை அவரிடத்தில் அதிகரிக்க வைக்கும்.

ஹாய்டா...

ஹாய்டா...

ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாத நாளாக மாற்றுங்கள் . அவ்வப்போது அவருக்கு காதல் எஸ்எம்எஸ் அனுப்புங்கள். செல்லை எடுத்து ஹாய்டா என்று சொல்லுங்கள்... தேவதைப் பெண்ணே இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் கண்ணே என்று செல்லமாக சிணுங்குங்கள்...

ஐ லவ் யூமா....

ஐ லவ் யூமா....

ஒரு நாளைக்கு குறைந்தது 100 முறையாவது ஐ லவ் யூ சொல்லுங்கள். சொல்லிக் கொண்டே கூட இருங்கள்... அதற்காக இப்படிச் சொன்னால்தான் உண்டு என்று அர்த்தம் இல்லை. சொன்னால் அழகாக இருக்கும்.

என் கரத்துக்குள் உன் உயிர்...

என் கரத்துக்குள் உன் உயிர்...

உங்களுடன் பழகும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் காதலி பாதுகாப்பான உணர்வைப் பெற வேண்டும். நீ என் பாதுகாப்பான கரங்களுக்குள் இருக்கிறாய், இந்த கதகதப்புடன் எப்போதும் சந்தோஷமாக இரு என்பதை நீங்கள் அவருக்கு உணர்த்த வேண்டும்.

தென்றலே.. மெல்லவே தூங்கு

தென்றலே.. மெல்லவே தூங்கு

உங்கள் காதலி தூக்கும் வருகிறது என்று சொன்னால் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்க்காதீர்கள். தலையைக் கோதி விடுங்கள், செல்லமாக முத்தமிடுங்கள், தோள் தொட்டு தட்டிக் கொடுங்கள்.. அவரை டிஸ்டர்ப் செய்யாத வகையில் காதுக்கு அருகே போய் கிசுகிசுப்பாக பேசுங்கள்.. ஒரு தென்றலாய் உங்கள் காதலியின் கண்களையும், மனதையும் தழுவி, வருடிக் கொடுத்து தூங்க வையுங்கள்.

அவ்வப்போது இச் இச்

அவ்வப்போது இச் இச்

நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்களா... பேச்சுக்கு இடை இடையே அவ்வப்போது முத்தம் கொடுங்கள். கன்னத்தில், கையில் நெற்றியில், விரல்களில், கண் இமையில் என முத்தம் தரலாம்.

இப்படித்தான் என்றில்லை... ஒவ்வொரு வி்தத்தில் உங்கள் காதலை அவருக்குப் புரிய வைக்கலாம்.. என்ன செய்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படி செய்கிறோம் என்பதும் கூட முக்கியமில்லை. ஏதாவது செய்கிறோமா என்பதுதான் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது. எது செய்தாலும் அது காதலை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.. மாறாக கசப்புணர்வை ஏற்படுத்தி விடக் கூடாது...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+