உங்க மனைவியை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவீங்களா?
ஆணின் அருகாமையில் இருக்கும் போது ஒருவித பாதுகாப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். காதலனோ... கணவனோ.... தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கவேண்டும்... கண்ணுக்குள் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.
தனக்கு கணவனாக, காதலனாக இருப்பவன் தன்னை புரிந்து கொள்பவனாக, தன்னை மதிப்பவனாக, தன் மீது அளவில்லாத பிரியம் கொண்டவனாக இருக்கவேண்டும் என்றுதான் அனைத்துப் பெண்களும் விரும்புகின்றனர்.
பெண்களுக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்து கொள்வது என்று தெரியலையே... ஏன் திடீர்னு நம்மை விட்டு விலகுறா? என்ன காரணம்னு தெரியலையே என்று குழம்ப வேண்டாம். கீழ்கண்ட தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்று உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

பாதுகாப்பு உணர்வு
இந்த காலத்தில் தைரியமான பெண்ணாக இருந்தாலும் கூட தன்னுடைய கணவரின் கையினை பாதுகாப்போடு பிடித்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதிகம் உள்ளனர். அது பெண்களுக்கே உள்ள இயல்பான ஒன்று. அவர்களுக்கு பாதுகாப்பானராக இல்லாமல், ஏதாவது பிரச்சினை என்றால் பெண்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஆண்களை அவர்களுக்கு அறவே பிடிப்பதில்லை.

அதிக காதல்
முப்பொழுதும் உன் கற்பனைகள் என்று கூறுவார்களே... அதே போல சதா சர்வகாலமும் காதலி அல்லது மனைவியின் நினைப்பிலேயே இருக்கும் ஆண்களை அதிகம் பிடிக்குமாம்.

கொஞ்சம் அழகு
அழகான ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. அது தவறான கருத்து அழகை விட ஆண்மை நிறைந்த... எதையும் தைரியமாக சொல்லத்துணிந்த, செய்யத்துணிந்த ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். அவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருப்பதைத்தான் விரும்புகின்றனராம்.

நேர்மை அவசியம்
நேர்மையான ஆண்களைத்தான் அதிக அளவில் பெண்கள் விரும்புகின்றனர். எதையும் நேருக்கு நேராக சந்திக்கும் ஆண்கள்தான் பெண்களின் விருப்பமாக உள்ளது.

மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்
பெண்களின் செயல்பாடுகளை பாராட்டுவதோடு, அவர்களை மதிக்கும் ஆண்களின் மீது தனி மரியாதை ஏற்படுகிறது. அதோடு அதிகமாக உற்சாகப்படுத்தும் ஆண்களை அதிக அளவிலான பெண்கள் விரும்புகின்றனராம்.

பெண்மையை கொண்டாடுங்கள்
காதலியாக இருக்கும் போது அதிக கவனம் செலுத்தி விட்டு மனைவியான பின்னர் அம்போ என்று விட்டுவிடும் ஆண்களை பிடிப்பதில்லையாம். திருமணத்திற்குப் பின்னரும் தனி கவனம் செலுத்தி தன்னைக் கொண்டாடும் ஆண்களைத்தான் அதிக பெண்கள் விரும்புகின்றனராம்.

ஸ்பரிசத்தோடு முத்தம்
மனைவியை அன்போடு தொடுவதும், அவ்வப்போது கொஞ்சுவதும், சின்னச் சின்னதாய் பாராட்டுடன் கொடுக்கும் முத்தமும் மிகப்பெரிய பரிசாக போற்றப்படுகிறதாம். கோடி ரூபாய் கொடுத்து வாங்கித் தரும் வைர நெக்லஸை விட அன்போடு வாங்கிக் கொண்டு போகும் மல்லிகைக்கு ஈடாகாது என்கின்றனர் அனுபவசாலிகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications