சவூதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்ததான முகாம்
ரியாத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ரத்ததான முகாம் சவூதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.
தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மனிதநேய பணியான ரத்த தானம் வழங்குவதில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. கடல் கடந்து வாழ்ந்தாலும் சற்றே அந்த மனித நேய பணியை எட்டு திசைக்கும் கொண்டு சென்று உயிர் காக்கும் ரத்த தான முகாம்களை வளைகுடா நாடுகளிலும் இன்னபிற வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சவூதி அரேபியாவின் வட மேற்கு மாகாணமான ஹாயில் பகுதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய 4வது ரத்ததான முகாம் கடந்த 19ம் தேதி கிங் காலித் மருத்துவமனை ரத்த வங்கியில் காலை 9 மணிக்கு முதல் மதியம் 12 வரை நடைபெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வார கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற இந்த முகாமில் 21 பேர் ரத்ததானம் செய்தனர்.
ஹாயில் கிளையின் தலைவர் காசிம் மற்றும் நிர்வாகிகளின் கடின உழைப்பாலும் மண்டலத் தலைவர் செய்யது இப்ராஹீம் மற்றும் மண்டல தொண்டர் அணி செயலாளர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த முகாமில் தமிழர்களும், கேரளாவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கிங் காலித் மருத்துவமனையில் பணிபுரியும் சவூதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் பஹத் அல் முஹசின் (மருத்துவமனையின் தகவல் தொழில் நுட்பத்துறையின் உதவித்தலைவர்) மற்றும் ஊழியர்கள் இந்த முகாமை ஏற்பாடு செய்த ஹாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications