24ல் துபாயில் அமீரக தமிழ்ச் சங்கத்தின் 'ஸ்போர்ட்ஸ் டே'
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டு தினம் வரும் 24ம் தேதி துபாயில் உள்ள சலா அல் தீன் ஸ்போர்ட்ஸ் ஹாலில் நடைபெறுகிறது.
அமீரக தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டு தினம் மற்றும் பிப்ரவரி மாதம் நடக்கும் பட்டிமன்றத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி வரும் 24ம் தேதி துபாய் சென்ச்சுரி மால் பின்புறம், அல் முல்லா பிளாசா அருகே உள்ள சலா அல் தீன் ஸ்போர்ட்ஸ் ஹாலில் நடைபெறுகிறது.
போட்டிகள், அணிகள் விவரம் வருமாறு,
ஆண்களுக்கான வாலிபால்: அணிக்கு 6 பேர் இருக்க வேண்டும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி: அணிக்கு 5 பேர் இருக்க வேண்டும்.
பெண்களுக்கான எரி பந்து போட்டி: அணிக்கு 6 பேர் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அமீரக தமிழ்ச் சங்க உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அணி இல்லாதவர்களுக்கு சங்கமே அணியை அமைத்துத் தரும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் ஷூ அணிந்திருக்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தவிர வரும் பிப்ரவரி மாதம் நடக்கும் பட்டிமன்றத்திற்கு ஆட்கள் தேர்வும் அன்றைய தினமே நடைபெறுகிறது. பட்டிமன்றத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பெண்கள் பார்வையில் ஆண்கள் கதாநாயகனா? வில்லனா? என்ற தலைப்பில் நடக்கும் பட்டிமன்றத்திற்கு போட்டியாளர்களை பட்டிமன்ற தலைவர் நகைச்சுவை மன்னன் தேவகோட்டை ராமநாதன் தேர்வு செய்கிறார்.












Click it and Unblock the Notifications