பிப். 8ல் துபாயில் பட்டிமன்றம், பாட்டுமன்றம், போட்டிமன்றம்
Subscribe to Oneindia Tamil

நடன நிகழ்ச்சி, சர்வதேச குறும்பட விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெறுகிறது. பட்டிமன்றத்தில் அசத்தப் போவது யாரு புகழ் தேவகோட்டை ராமநாதன் கலந்து கொள்கிறார். பாட்டுமன்றத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பி., யேசுதாஸ் உள்ளிட்டோருடன் பாடிய பாடகர்கள் பாடவிருக்கிறார்கள்.
அமீரக தமிழ்ச் சங்கம் நடத்திய கொலு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் கலை விழாவில் தமிழர் திருநாளான பொங்கல் தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனரும், எழுத்தாளருமான ஹரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் அம்புலி என்ற த்ரில்லர் 3டி படத்தை இயக்கியவர் ஆவார்.












Click it and Unblock the Notifications