இந்தப் ‘பேன்’ தொல்லை பெருந்தொல்லைப்பா....
‘பேன்' என்றதும் ஏதோ ரசிகர்களைப் பற்றி சொல்ல வருகிறோம் என தவறாக புரிந்து கொண்டால அதற்கு நாங்கள் பொறுப்பல்ல...
இது உண்மையான் ‘பேன்' பற்றியது. அதாகப்பட்டது, தலையில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான பேன் பற்றி என்னவெல்லாம் நமக்குத் தெரியும் எனக் கேட்டால், பேன் கடிக்கும் ரத்தத்தைக் குடிக்கும் என்பது மட்டும் தான் பதிலாக வரும்.
ஆனால், இம்மியளவு பேனுக்குள் இமாலய ரகசியங்கள் பல ஒளிந்திருக்கின்றன.

பேன் ஒரு பூச்சி...
இறக்கை இல்லாத மிகச் சிறிய பூச்சியினம் பேன்கள் தான்.

அறிவியல் பெயர்...
மனிதர்களின் தலைமுடியில் வாழும் இனத்திற்கு ‘பெடிகுலஸ் ஹயூமனஸ்' என்று பெயர். விலங்குகள் மற்றும் பறாவைகளின் உடலில் வாழும் பேன் இனம் ‘இத்தீரியஸ் பியூபிஸ்'.

இரண்டு வகை...
பொதுவாக மனித உடலில் இரண்டு வகை பேன்கள் வாழுகின்றன. ஒன்று தலை முடியில் மட்டும் வாழ்வது, மற்றொன்று கழுத்துக்கு கீழுள்ள உடலின் பாகங்களில் வாழ்வது.

குறைந்த ஆயுட்காலம்....
உலகில் இதுவரை கிட்டத்தட்ட 230 பேன் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பேனின் ஆயுட்காலம் 7 வாரங்கள் மட்டுமே.

முட்டை போட்டு...
சராசரியாக ஒரு பேன் நாளொன்றுக்கு 10 முட்டைகள் வீதம் அதன் ஆயுட்காலத்தில் மொத்தம் 300 முட்டைகள் இடுகின்றது.

உடல் கூட்டில்....
பேனின் முட்டைகளை அடை காக்கும் பணியைச் செய்யும் பணியைச் செய்வது சாதசாத் நாமே தான். நமது உடல் வெப்பமே பேன் குஞ்சு பொரிக்க காரணமாகும்.

கொம்பு இருக்காம்...
கொசுக்கள் போல, பேனின் தலையிலும் கொம்பு போன்ற சிறிய கூர்மையான பகுதி உண்டு. இதன் மூலமே உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சுகின்றனவாம்.

பாம்பு மாதிரி...
பாம்புகள் போல, பேன்களும் தன் வாழ்நாளில் மூன்று முறை மேற்தோலை உரித்துக் கொள்கின்றன.

அலர்ஜி...
பேன்களால் நோய் பரவுவது இல்லை என்றாலும், தலையிலேயே பேனை நசுக்கிக் கொல்வதால் அலர்ஜி ஏற்படுமாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications