பாய்ஸ்...’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்
லண்டன்: வெள்ளை டி-சர்ட்டில் கறுப்பில் ‘T' என்ற எழுத்து எழுதப் பட்ட டி-சர்ட் போட்ட ஆண்கள் மிகவும் வசீகரமாகத் தெரிவார்களாம் பெண்களுக்கு. இது ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.
ஆள் பாதி, ஆடை மீதி என்பார்கள். ஆடையை வைத்து தான் பெரும்பாலும் மத்தவர்களைக் கவர முடியும் என்பது சிலரது கருத்து. அதுமட்டுமில்லாது, உணவு, உடை, இருப்பிடம் என அத்தியாவசிய தேவைகளுள் ஆடையும் ஒன்று.
ஆடைகளுக்கும், வண்ணங்களுக்கும் என சில தனிப்பட்ட பண்புகளும், குணங்களும் உண்டென்று கண்டறிந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். லேட்டஸ்டாக வெறும் வெள்ளை டிசர்ட்டில் ‘T' என்ற எழுத்து ஒன்று மட்டுமே போதுமாம் ஆண்களை அழகாக்க.... என்று கண்டறிண்டிருக்கிறார்கள்.

ஒற்றை எழுத்தில் உயரும் அழகு...
நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘T' என்ற ஒற்றை எழுத்து, அந்த உடையை அணிந்திருப்பவருடைய தோற்றத்தை உயர்வாகக் காட்டுகிறதாம்.

அழகைத் தூக்கிக் காட்டும் டிசர்ட்...
அதாவது, குறிப்பிடத்தக்க அளவு இல்லாத தோள், மார்பு போன்றவற்றின் அழகைத் தூக்கிக் காட்டுகிறதாம் இந்த ‘T' போட்ட டி-சர்ட்

டிசர்ட் அணிந்த ஆண்கள்...
இந்த ஆய்வில் சுமார் முப்பது பெண்கள் கலந்து கொண்டார்களாம். அவர்களிடம் விதவிதமான உடலமைப்பு கொண்ட, அதே சமயம் 'T' போட்ட டிசர்ட் அணிந்த ஆண்களின் புகைப்படம் தரப்பட்டதாம். பின்னர், அந்த ஆண்களின் கவர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் புத்திசாலிதனத்தைக் குறித்து மதிப்பிடச் சொன்னார்களாம்.

மார்க் போடுங்கம்மா...
அதன் பிறகு, அதே ஆண்களை வேரு உடை அணிய வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதே பெண்களிடம் காட்டி மதிப்பெண் போடச் சொன்னார்களாம் ஆராய்ச்சியாளர்கள்.

பத்து சதவீதம் கூடும் அழகு...
ஆய்வின் முடிவில், 'T' போட்ட டி சர்ட் அணிந்திருந்த ஆண்கள் சாதாரண உடை அணிந்திருந்த போது இருந்ததை விட பத்து சதவீதம் அழகாக இருந்ததாக தெரிய வந்துள்ளதாம்.

இடுப்பை குறைக்கும் ‘T’...
‘T' என்ற எழுத்து உடலின் அழகைக் கூட்டிக் காட்டுகிறதாம். வயிறு மற்றும் இடுப்பின் அழகை சிக்கென்று காட்ட உதவுகிறதாம் இந்த ‘T'.

கவர்ச்சியை கூட்டும் ‘T’...
டி சர்ட்டில் உள்ள ‘T'யின் அளவைக் குறித்தும், ஆணின் கவர்ச்சி கூடிக் குறைகிறதாம். இல்லாத புத்திசாலித்தனத்தைக் கூட இருப்பதாகக் காட்டுகிறதாம் இந்த ‘T'.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications