உங்களுக்குத் தெரியுமா, அவங்களுக்கு ரொமான்ஸ் பிடிக்கும்...!

ரொம்பெல்லாம் மெனக்கெடவே தேவையில்லை. எப்படி அணுகுவது, என்ன செய்வது என்று தயங்கவும் தேவையில்லை. ரொமான்ஸை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. அவர்களின் மூடு அறிந்து, உள்ளம் புரிந்து அணுக வேண்டியது மட்டுமே முக்கியம்.
எந்த விஷயத்தைச் செய்தாலும் அதை ரசித்துச் செய்யுங்கள். லயித்துச் செய்யுங்கள், போதும். ஒன்றுமில்லை, உங்கள் துணை செய்த சாப்பாடு நன்றாக இருந்ததா, வெறுமனே பாராட்டாதீர்கள். மென்மையாக வாரி அணைத்து, காதில் ஒரு முத்தம், கன்னத்தில் சில முத்தம், கண்களில் பல முத்தம் என்று கொடுத்து, மூக்கோடு மூக்கு உரசியபடி, உதடுகளோடு உராய்ந்தபடி மென்மையான குரலில் பாராட்டுங்கள். அப்படியே உதட்டிலும் முத்தம் தரலாம், தப்பில்லை. அவர் சிலிர்த்து உங்கள் மீது சரிவது நிச்சயம்.
துணைக்கு சோர்வாக இருக்கிறதா... அருகே போய் அமருங்கள். அப்படியே உங்களது மார்பில் சாய்த்துக் கொள்ளுங்கள். மெதுவாக கைகளைப் பிடித்து விடுங்கள். விரல்களுக்கு சொடுக்கு எடுங்கள். தலை முடியை மெதுவாக கோதி விடுங்கள், முடிகளுக்குள் விரல்களை விட்டு மெல்ல நீவி விடுங்கள். தலையை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்யுங்கள். கண்களை மூடச் சொல்லி அழுத்தாமல் முத்தம் வையுங்கள். கன்னக் கதுப்பைத் தடவிக் கொடுங்கள். காதுகளை மெதுவாக பிடித்து விடுங்கள். கழுத்தில் விரல்களால் தடவித் தாருங்கள். சொர்க்கமாக உணருவார்.
கண் வலிக்கிறது என்று சொல்கிறாரா... அவரை உட்கார வைத்து, நீங்களும் அமருங்கள். அவரது கண்களை மூடச் சொல்லி, ஈரத் துணியை எடுத்து கண்களில் வைத்து ஒற்றி எடுங்கள். வீட்டில் வெள்ளரிக்காய் இருந்தால், அழகாக நறுக்கி அதை அடுத்து அவரது கண்களில் வைத்து, அவரை அப்படியே மடியில் சிறிது நேரம் படுக்க வையுங்கள். பிறகு காதோடு வாய் பொருத்தி மெதுவாக கதை பேசிக் கொண்டிருங்கள். அவருக்கு இதமாகவும் இருக்கும், சுகமாகவும் இருக்கும். பேசும் கதை ரொமான்டிக்காக இருந்தால் ரொம்ப நல்லது.
கால் வலிக்கிறதா... படுக்கச் சொல்லி காலை தூக்கி உங்களது மடியில் வைத்துக் கொள்ளுங்கள். விரல்களில் ஆரம்பித்து கால் முழுவதையும் மசாஜ் செய்யுங்கள். விரல்களை மெதுவாகப் பிடித்து விட்டு சொடுக்கு எடுங்கள். வெறுமனே சொடுக்கு எடுக்காமல் விரலை மேலே தூக்கி அழகாக முத்தமிடுங்கள். ஒவ்வொரு விரலையும் முத்தமிடுங்கள். முடிந்தால் மெல்லிதாக கடித்து விடுங்கள் - வலிக்காமல்தான்.
விரல்களை முடித்து விட்டு அப்படியே கெண்டைக்காலில் மசாஜ் செய்யுங்கள், முழங்கால் வரை போங்கள். இரு கால்களையும் மெதுவாக பிடித்து விட்டு மசாஜ் செய்யும்போது அவருக்குள் இருந்த அத்தனை சோர்வும் அப்படியே தலை தெறித்து ஓடி விடும். அதற்குப் பதில் உங்கள் மீது கொள்ளைப் பாசம் ஓடி வந்து சேரும்.
உங்கள் துணையை மதிக்க வேண்டியது எப்போதுமே மிக மிக முக்கியம். அதுதான் ரொமான்ஸின் முக்கிய அம்சமே. அவர் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். அவரை ஊக்குவியுங்கள். அவர் சொல்வது நன்றாக இருந்தால் தட்டிக் கொடுங்கள், முத்தம் கொடுங்கள், பாராட்டுங்கள், ஊக்கம் தாருங்கள். ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் பாராட்டு தெரிவியுங்கள்.
என் அழகுச் செல்லம் நீ... அமுதக் கின்னம் நீ... ஆசை வெல்லம் நீ என்று காதல் மொழி பேசுங்கள். கவிதை பாடுங்கள். தூக்கி விளையாடுங்கள். நெஞ்சில் சுமந்து மகிழுங்கள்... இதையெல்லாம் நீங்கள் லயித்து, ரசித்துச் செய்யும்போது நிச்சயம் அவரது மனதிலும் நீங்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைக்கும்...
முறுக்கு மீசையுடன், எப்போதும் முரட்டுத்தனமாகவே இருப்பவரா நீங்கள்... அப்படி இருக்காதீங்க பாஸ், மாறிவிடுங்கள்.. காதலில் மூழ்குங்கள், காதலுடன் வாழப் பழகுங்கள். துணையை ரசியுங்கள், துணையிடம் சரணடையுங்கள்... அன்புக்கு அடிமையாவதை விட வேறு சொர்க்கம் இருக்கிறதா என்ன...!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications