பார்த்த 3-வது நிமிஷத்திலேயே ஆண்களை பிடிச்சிருமாமே பெண்களுக்கு...?
ஒரு சர்வே வெளியாகியுள்ளது. அதாவது ஆண்களைப் பார்த்த 3வது நிமிடத்திலேயே இவர் நமக்குப் பொருத்தமானவரா இல்லையா என்பதை பெண்கள் முடிவு செய்து விடுகிறார்களாம்.
பெரும்பாலான நேரங்களில் சம்பந்தப்பட்ட ஆண்களை விரும்பவும் ஆரம்பித்து விடுகிறார்களாம் பெண்கள். ஆனால் அதை ரொம்ப ரொம்ப லேட்டாகத்தான் வெளிக்காட்டுவார்களாம்.
ஆண்களை விட பெண்கள் இந்த விஷயத்தில் படு வேகமாக முடிவெடுக்கிறார்களாம்.
அந்த சர்வேயைப் பார்ப்போமா....

பிடித்தால் பிடித்ததுதான்
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணைப் பிடித்து விட்டால் கிட்டத்தட்ட கடைசி வரை அதே மன நிலையில்தான் இருப்பார்கள் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவு சொல்கிறது.

பிடிச்ச முயலுக்கு மூனே கால்...
அதேபோல தாங்கள் ஒரு முடிவெடுத்து விட்டால், அது தவறாகவே இருந்தாலும் கூட, அதுதான் சரி என்றும் பிடிவாதமாகஇருப்பார்களாம் பெண்கள்.

தீர்ப்பே மாத்த முடியாது நாட்டாமை...
மேலும் ஆண்கள் குறித்து தாங்கள் போடும் கணக்கையும் அவர்கள் அவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள மாட்டார்களாம்.

இது சரியா...
ஆனால் இது முழுமையாக சரியல்ல என்று சில பெண் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அது ஆகும் மாசக்கணக்கில்
டிவி நடிகை பூஜா கெளர் இதுகுறித்துக் கூறுகையில், இதெல்லாம் சான்ஸே இல்லை. ஒரு ஆணைப் புரிந்து கொள்ள கண்டிப்பாக அவகாசம் பிடிக்கும். மூனே நிமிஷத்தில் முடிவுக்கு வரவே இயலாது. சிலரைப் புரிந்து கொள்ள மாதக் கணக்கில் கூட ஆகலாம்.

ராஷ்மி என்ன சொல்றார்னா...
இன்னொரு டிவி நடிகை ராஷ்மி தேசாய் என்ன சொல்கிறார் என்றால், என்னால் நிச்சயம் ஒரு ஆணை 3 நிமிடத்தில் முடிவு பண்ண முடியாது. உண்மையில் நாம் ஒரு ஆண் மீது காதலில் விழுகிறோம் என்றால் எப்போது விழுந்தோம் என்பதைக் கூட உணர முடியாது. அதுதான் உண்மை. ஆண்கள் மீது காதலில் விழுவதே ஒரு கவிதை போன்றது. அதை இப்போதுதான் என்று சரியாக நிர்ணயிக்க முடியாது.

அதெப்படி எடுத்ததுமே...
மாடல் அழகியும், டிவி நடிகையுமான ஷௌரியா செளகான் கூறுகையில், நிச்சயம் முடிவெடுக்க முடியாது. பார்த்ததும் கவரப்படலாம். ஆனால் அதை வைத்து முடிவு என்று சொல்லி விட முடியாது.

தனுஸ்ரீக்கு ஓ.கே.வாம்
நீத்து சந்திரா என்ன சொல்கிறார் என்றால், மூன்று நிமிடங்களில் முடிவெடுக்க முடியாதுதான். இருப்பினும் ஒரு ஐடியாவுக்கு வந்து விடலாம். ஆண்களைப் பார்த்ததுமே சில விஷயங்கள் நம்மைக் கவரும். ஹேர்ஸ்டைல், தோற்றம், என சில.. அதை வைத்து பின்னர் ஒரு முடிவுக்கு வர முடியும்.
நீங்க எப்படி....
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications