Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு உளமார ஒரு புத்தகம் பரிசளியுங்கள்’!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டு தோறும் ஏப்ரல் 23ம் தேதி உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாகக் ( WORLD BOOK AND COPYRIGHT DAY, April 23) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

உலகில் வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த சொத்துகளை, பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ம் தேதி, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோ சார்பில் 1996, ஏப்ரல் 23 ஆம் தேதி ஜெனிவாவில் உலகப் பதிப்பாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது, ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தகத் தினம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புத்தகம் மற்றும் நூலாசியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நினைவஞ்சலியாக...

நினைவஞ்சலியாக...

ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், இன்கா கார்சிலாசோ போன்ற சர்வதேச புகழ்பெற்ற இலக்கியவாதிகள் 1616, ஏப்ரல் 23ல் மறைந்தனர். இலக்கியத்தில் இவர்களது பங்களிப்பை போற்றும் வகையில், இவர்களது மறைந்த நாளையே, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ உருவாக்கியது.

மிகேலுக்காக மட்டுமா..?

மிகேலுக்காக மட்டுமா..?

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் மிகேல் டி செர்வான்டீஸ் சாவெத்ரா (Miguel de Cervantes Saavendra) மறைந்த தினத்தை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டது உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் என்று சொல்லப்படுவதும் உண்டு.

இலக்கியத்தில் புதுமை...

இலக்கியத்தில் புதுமை...

ஷேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்த மிகேல் புதினங்கள், நாடகங்கள், கவிதைகள் என்று இலக்கியத்தில் புதுமைகள் படைத்தார்.

கற்பனையில் வாழும் கதாநாயகன்...

கற்பனையில் வாழும் கதாநாயகன்...

இவரின் டான் கொய்ஜொடி டி லா மஞ்சா (Don quijote de la Mancha ) நூல் மிகவும் புகழ்பெற்றது. இதில் வரும் டான் கொய்ஜொடி ஆகாய கனவுகளும் ஏக்களும் நிறைந்த சாதாரண மனிதன். அவன் இல்லாத தேசம் ஒன்றுக்கு தனை ராஜாவாக நினைத்துக் கொண்டு செயல்படுவதுதான் கதை. இதை வீரம், சோகம், காதல் ரசம் சொட்டச் சொட்டவும், நகைச் சுவையாகவும் எழுதி இருக்கிறார்.

யுனெஸ்கோ சொன்ன ஐந்து...

யுனெஸ்கோ சொன்ன ஐந்து...

புத்தகங்களின் அவசியத்தை அனைவரும் அறிந்துக்கொள்ள ஐந்து விதமான நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என யுனெஸ்கோ சொல்லியுள்ளது.

பதிப்பகங்களின் பணி...

பதிப்பகங்களின் பணி...

புத்தக கண்காட்சிகளை பதிப்பகங்கள் நடத்த வேண்டும். மலிவான விலையில் புத்தகங்களை வெளியிட வேண்டும்: மாணவர்கள் நோயாளிகள், கைதிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்க வேண்டும்.

தொழில் அதிபர்கள் பரிசு..!

தொழில் அதிபர்கள் பரிசு..!

புத்தகத் தினத்தன்று பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொழிலதிபர்கள் பரிசளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். தொழிற்சாலையில் சிறு நூலகங்களைத் தொடங்கிப் ப்ணியாளர்களை படிப்பாளர்களாக மாற்ற வேண்டும். கல்வி அறிவு விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த வேண்டும்.

நூலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்..!

நூலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்..!

சிறுவர் சிறுமிகளிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு நூலகங்களும் கல்வி நிறுவனங்களும் போட்டி வைக்க வேண்டும். மேலும், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இளம் எழுத்தாளர்களிடையே போட்டி நடத்த வேண்டும்.

பொதுமக்கள்..!

பொதுமக்கள்..!

நூலகத்திற்கு சென்று பொதுமக்கள் புத்தகங்களை படிக்க வேண்டும். வீட்டுக்கொரு சிறிய நூலகத்தை ஆரம்பிக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள், அன்பானவர்களுக்கு நூலை பரிசளிப்பதை வழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பத்திரிக்கைகள்..!

பத்திரிக்கைகள்..!

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதத்தில் வாசகர்களை பத்திரிக்கைகள் ஊக்கப்படுத்ததவேண்டும்.

புத்தகப்பரிசு...

புத்தகப்பரிசு...

புத்தக தினத்திற்காக யுனெஸ்கோ ஒரு பொன்மொழியையும் வெளியிட்டு உள்ளது. ‘நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு உளமார ஒரு புத்தகம் பரிசளியுங்கள்' என்பதே அது.

உயர்வும்... தாழ்வும்...

உயர்வும்... தாழ்வும்...

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் கல்வி கற்றோரின் தொகை பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. 1947 ஆம் ஆண்டு 90 சதவிகிதமாக இருந்த கல்லாதவர்கள் தொகை 2000 ஆம் ஆண்டு 40 சதவிகிதமாக குறைந்தது. ஆனால், கல்வியறிவு வளர்ச்சி வளர்ந்த அளவுக்கு வாசிக்கும் பழக்கம் தமிழர்களிடையே போதிய அளவுக்கு வளரவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+