நீ உண்மையை சொல்லு பேபி, நான் கோபப்படவே மாட்டேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் ஆண்களிடம் சொல்லும் 5 பொய்கள் என்னவென்று பார்ப்போம்.

அது காதலியாகட்டும், மனைவியாகட்டும் அவர்கள் சொல்லும் அனைத்துமே உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் சில பல நேரங்களில் அவர்கள் நினைப்பதை வெளியே சொல்லமாட்டார்கள். மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு கேட்டால் பொய் சொல்வார்கள்.

அவ்வாறு பெண்கள் ஆண்களிடம் கூறும் 5 பொய்களை பார்ப்போம்.

பரவாயில்லை

பரவாயில்லை

காதலி அல்லது மனைவியின் பிறந்தநாளை மறந்துவிட்டீர்கள் அல்லது அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஏதாவது செய்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர்கள் பரவாயில்லை, இருக்கட்டும் என்று கூறினால் அது நிச்சயம் பொய் தான். என் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியல இப்ப வந்து சப்ப கட்டு கட்டுறான் என்று மனதில் திட்டிக் கொள்வார்கள்.

நீ நீயாக இருப்பது பிடித்திருக்கு

நீ நீயாக இருப்பது பிடித்திருக்கு

நீங்கள் நீங்களாக இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கு என்று ஒரு பெண் கூறினால் அதில் பல நேரங்களில் உண்மை இல்லை. பெண்களுக்கு நீங்கள் ஆடை அணியும் ஸ்டைல், வெளி இடங்களில் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்டவை பிடிக்காவிட்டாலும் உங்களை திருப்திபடுத்த நீங்கள் நீங்களாக இருப்பது பிடித்திருக்கிறது என்பார்கள்.

சைட் அடித்தால்

சைட் அடித்தால்

வேறு பெண்களை சைட் அடித்தால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று எந்த பெண் கூறினாலும் அது பொய் தான். காதலனோ, கணவனோ பிற பெண்களை சைட் அடித்தால் பெண்களுக்கு நிச்சயம் கோபம் வரும். சில பெண்கள் உடனே பொறிந்து தள்ளிவிடுவார்கள். ஆனால் சில பெண்களோ அதை கண்டும் காணாதது போன்று இருப்பார்களே தவிர அதன் பின்விளைவுகளை ஆண்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டி இருக்கும்.

நண்பர்கள்

நண்பர்கள்

உங்கள் நண்பர்கள் கூல் என்று பெண்கள் கூறினால் அதில் உண்மை மட்டும் தான் உள்ளது என்று கூற முடியாது. உங்களின் நண்பர்களுடன் அடிக்கடி நேரம் செலவிடுகிறீர்களா? அது உங்கள் மனைவி அல்லது காதலிக்கு சில நேரங்களில் ஓகே என்றாலும் பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தும். நான் இருக்கும்போது எப்பொழுது பார்த்தாலும் என்ன நண்பர்களுடன் ஓடுகிறான் என்று மனதில் நினைத்துக் கொள்வார்கள். நேரம் பார்த்து அதை வெளிப்படுத்தவும் செய்வார்கள்.

உண்மையை சொல்லு, கோபப்பட மாட்டேன்

உண்மையை சொல்லு, கோபப்பட மாட்டேன்

என் ஆடை எப்படி இருக்கு, கம்மல் எப்படி இருக்கு, புது ஹேர்ஸ்டைல் எப்படி இருக்கு, சமையல் எப்படி இருக்கு என்று கேட்டுவிட்டு மறைக்காமல் உண்மையை சொல்லுங்கள் நான் கோபமே பட மாட்டேன் என்று உங்கள் காதலியோ, மனைவியோ கூறினால் பட்டென்று உண்மையை சொல்லிவிடாதீர்கள். உண்மையை கூறினால் கோபப்பட மாட்டேன் என்று சொல்வது பொய். அதை நம்பி நீங்கள் ஏதாவது உண்மையை உளறிவிட்டுஅடி வாங்கக் கூடாதே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+