‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க...’ - ஓ.கே, நீங்க ஹீரோவாயிட்டீங்க பாஸ்!!!
பெண் மனசு ஆழம் என்றும், அதனை எப்படி வசப் படுத்துவது என்பதும் தொடர்ந்து ஆண்களுக்கு சவாலான காரியமாகவே உள்ளது.
என்ன செய்து பெண்களின் மனதில் இடம் பிடிப்பது என தொடர்ந்து ஆண்கள் பல்வேறு முறைகளில் முயற்சி பிளஸ் ஆராய்ச்சி செய்தபடிதான் உள்ளனர்.
அதுபோன்ற நல்ல உள்ளங்களுக்காக பெண்களைக் கவர இப்படி பண்ணிப் பாருங்கப்பா என்று கூறி சில டிப்ஸ்களை தொகுத்து வழங்கியுள்ளது ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று. இதுதான் அது...

பேசுங்க....
பெண்களுக்கு பேசிக் கொண்டே இருப்பதென்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே, முடிந்தவரை மனம் கவர்ந்த பெண்களுடன் நேரடியாகவோ அல்லது குறுந்தகவல் மூலமாகவோ தகவல் பரிமாறிக் கொண்டே இருங்கள்.

புகழ்ச்சிக்கு மயக்காத இதயமுண்டோ...
அடிக்கடி பெண்களைப் புகழ்ந்து தள்ளுங்கள். ‘வாவ் என்னா முடி..., இது புது டிரஸ்ஸா ரொம்ப அழகாயிருக்கே..., உன்ன மாதிரி புத்திசாலி சான்சே இல்ல...' என சகட்டுமேனிக்கு பாராட்டுங்கள். ஆனால் தப்பித்தவறிக் கூட ‘ப்ப்ப்ப்ப்பா... யாருடா இந்தப் பொண்ணு' என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்... அப்புறம், விழும் அடிக்கு டிப்ஸ் கொடுத்தவன் பொறுப்பாக மாட்டான்.

பில் கட்டுங்க....
உங்கள் தோழியுடன் அடிக்கடி வெளியில் சுற்ற விரும்பினால் தவறாமல் அனைத்து பில்களையும் நீங்களே கட்ட வேண்டும் ஆண்களே. எவ்வளவு செலவானாலும் பரவாயி்லை. கடன் வாங்கியாவது கட்டிருங்க. இல்லையென்றால் கருமி என்ற அவப்பெயருக்கு ஆளாவீர்கள்... சரித்திரம் உங்களை எதிர்காலத்தில் தரித்திரம் என்று கூட திட்டலாம்.

ஹீரோ...
சமூகத்தில் அக்கறையாக செயல்படும் ஆண்களைப் பெண்கள் ஹீரோக்களாகப் பாவிப்பார்களாம் அவர்களின் மனம் கவர்ந்த ஹீரோயின்கள்.

வசீகரிக்கும் உடைகள்...
எப்போதும் இளமையாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் ஸ்டைலிஷான ஆடை அணியுங்கள். உதாரணமாக டிசர்ட், ஜீன்ஸ் அணியும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

பாசாங்கு காட்டுங்கள்...
தோழியுடன் வெளியில் செல்லும்போது, பாதை சரியாக புரிபடவில்லையென்றால் அதனை வெளிக் காட்டிக் கொள்ளாதீர்கள். எல்லாம் எமக்குத் தெரியும் என காட்டிக் கொள்ளுங்கள்... வழி தெரியாமல் விழி பிதுங்கி தெருத் தெருவாக சுற்ற நேர்ந்தாலும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications