அஜ்மானில் நடைபெற்ற எக்ஸ்போ 2014: மன்னர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: அஜ்மான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆதரவுடன் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் அஜ்மான் எக்ஸ்போ 2014 அஜ்மான் கெம்பின்ஸ்கி ஹோட்டலில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் அஜ்மான் மன்னர் அல் நுஐமி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த எக்ஸ்போவில் அபுதாபி இஸ்லாமிய வங்கி, அஜ்மான் சேம்பர் ஆஃப் காமர்ஸ், அஜ்மான் சுற்றுலா மையம், பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்றன. மேலும் பல்வேறு வணிகக் கருத்தரங்குகளும் நடைபெற்றன.

சமீப காலத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்டவற்றை தொடர்ந்து அஜ்மான் தனது வளர்ச்சியை வெளிக்காட்டும் வண்ணமும், முதலீட்டாளர்களைக் கவரும் வண்ணமும் இதுபோன்ற எக்ஸ்போ உள்ளிட்டவற்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications