சூப்பர்.. வாரம் ஒருவர் விடுதி செல்வோம்.. பஹ்ரைன் தமிழர்களின் அசத்தல் கொண்டாட்ட விழா
பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் "வாரம் ஒரு தொழிலாளர் விடுதி செல்லுதல்" திட்டத்தின் 75வது வார கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை, மார்ச் 15 அன்று குறையாஹ் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் விடுதியில் கொண்டாடப்பட்டது. தொழிலாளர்கள் ஒன்றுகூடி கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பெ. கார்த்திகேயன் பேசும்போது "வாரம் ஒரு தொழிலாளர் விடுதி செல்லுதல்" திட்டம் கடந்த 2017ம் ஆண்டு உழைப்பாளர் தினத்தன்று சங்க சமூகநலத்துறையின் கீழ் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை அன்று தொழிலாளர் விடுதிகளுக்கு சென்று அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்து இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மது, தற்கொலைக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுகிறது" என்று கூறினார்.

சங்கத்தின் சமூகநலத்துறை செயலாளர் திரு. நோ.கி. பிரவீன் கூறும்போது "75 தொழிலாளர் விடுதிகள் சென்றதன் மூலம் இதுவரை சுமார் 10000 தொழிலாளர்களை சந்தித்திருக்கிறோம், இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்திய தூதரகத்திற்கு நன்றி" என்று கூறினார்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து சமூக சேவையாற்றி வரும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தை பஹ்ரைன் வாழ் தமிழர்கள் வெகுவாக பாராட்டினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications