அபுதாபியில் "பாரதி நட்புக்காக" அமைப்பு நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பு நடத்திய இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் அபுதாபியில் "பாரதி நட்புக்காக" நடத்திய இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 12/07/2014 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.
பாரதியின் பொதுச் செயலாளர் ஹலீல் ரஹ்மான் தலைமையில் பாரதியின் தலைவர் இராமகிருஷ்ணன் மற்றும் நிறுவனர் ஜகன்னாதன் முன்னிலையில் இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் நடைப்பெற்ற விழாவில் மதுரையைச் சேர்ந்த அல்ஹாஜ். ஜைனுல் ஆபிதீன் மற்றும் காயல் ஹாபிஜ் ஹுசைன் மக்கி மஹ்ழரி சிறப்புரை வழங்கினார்கள்.
விழாவிற்கு இந்திய சமூக மற்றும் கலாச்சார மைய தலைவர் திரு.நடராஜன், பொதுச் செயலாளர் திரு.வினோத் மற்றும் ஏராளமானோர் வந்திருந்து சிறப்பித்தனர். மேலும் பாரதியின் செயற்குழு உறுப்பினர்கள் முருகப்பன், முனீஸ்வரன், கதிரேசன் ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக அமைய பேருதவியாக இருந்தனர்.












Click it and Unblock the Notifications