ரத்த தானம் செய்ய விருப்பமா? ஏப்ரல் 10ல் அஜ்மானில் ரத்ததான முகாம்.. வாருங்கள்
அஜ்மானில் ரத்த தான முகாம் ஏப்ரல் 10ம் தேதி நடைபெறுகிறது. விரும்பும் அனைவரும் முன்பதிவோடு ரத்ததானத்தை செய்ய வரலாம்.
அஜ்மான் : அஜ்மானில் ரமதா ஓட்டல் பிளாக் ஸ்கொயர் பின்புறம் அமைந்துள்ள அரேபியா டாக்சி அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது.
அமீரகத்தில் விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை போது ரத்தப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுபோன்ற அவசர தேவையை கருத்தில் கொண்டும், ஒரு உயிரைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் ரத்ததானம் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை ஹிதாயத் மற்றும் கீழை ஏ ஹமீது யாசின் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் முறையே 050 51 96 433, 052 777 8341 ஆகும்.
ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications