அமீரகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஷார்ஜா: அமீரகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடந்து வருகிறது.
உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளை கூட புற்று நோய் தாக்கி வருகிறது. பெண்களை மார்பக புற்றுநோய் தாக்கி வருகிறது.

இந்நிலையில் அமீரகத்தில் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார பயணம் நடந்து வருகிறது. கடந்த 7ம் தேதி துவங்கிய இந்த பிரச்சாரம் வரும் 17ம் தேி வரை நடைபெறுகிறது.

ஷார்ஜா, அல் தைத், மசாபி, திப்பா, புஜேரா, கோர்பக்கான், கல்பா, ராசல் கைமா, உம் அல் குவைன், அஜ்மான், துபாய், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் வரும் 17ம் தேதி அபுதாபியில் நிறைவடையும்.












Click it and Unblock the Notifications