பட்டாசும் பலகாரமும் இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்க முடியாது…
பண்டிகை நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்த கையோடு பலகாரத்தட்டும் கையுமாக டிவி பார்க்க அமர்ந்து விடுகின்றனர் வாண்டுகள். பெரியவர்கள் ஒரு குலோப் ஜாமுன்... கொஞ்சம் அல்வா... ஒரு மைசூர் பாகு என ருசித்து கலோரியை அதிகரித்துக் கொள்வார்கள்.
உலக அளவில்இந்தியாவில்தான் அதிக அளவிலான சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றனர். இது 20 ஆண்டுகளில் 150 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்தியாவில் மாம்பழ சீசன் சமயத்திலும், தீபாவளி பண்டிகை காலத்திலும்தான் சர்க்கரை நோயாளிகள் இருமடங்கு அதிகரிக்கின்றனர் என்கின்றது ஒரு சர்வே. தீபாவளி பலகாரத்தில் எந்த பலகாரத்தில் கலோரி எந்த அளவு இருக்கிறது என்றும் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

லட்டு, ஜிலேபி, அல்வா
தீபாவளி இனிப்புகளில் முக்கிய இடம் வகிப்பது லட்டு, ஜிலேபி, அல்வாதான். இந்த இனிப்புகளை சாப்பிடும் முன் இதன் கலோரிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு ஜிலேபியில் 150 கலோரிகளும், ஒரு லட்டுவில் 153 கலோரிகளும், ஒரு பீஸ் அல்வாவில் 82 கலோரிகளும் இருக்கின்றனவாம்.

மைசூர் பாகு
இப்போது நெய் சொட்ட சொட்ட வாயில் வைத்தாலே கரையும் அளவிற்கு மைசூர் பாகு கிடைக்கிறது. சுகராவது ஒன்றாவது கொஞ்சம் சாப்பிடுவோம் என்று ஒரு பீஸ் அள்ளி விழுங்கினால் போச்சு ஒரு பீஸ் மைசூர் பாகில். 357 கலோரி இருக்கிறதாம்.

குளோப் ஜாமுன்
பண்டிகை வந்தாலே குலோப் ஜாமுன் செய்யாமல் இருக்கமாட்டார்கள். ரெடி மிக்ஸ் வாங்கி செய்து சர்க்கரையை கிலோ கணக்கில் போட்டு பாகு காய்ச்சி வைத்து ஊறப்போட்டு விடுவார்கள். போக வர ஒன்றொன்றாக சாப்பிட்டு கொண்டாடுவார்கள் பண்டிகையை ஒரு குலோப் ஜாமுனில் 387 கலோரிகள் இருக்கிறதாம்.

ரசகுல்லா
குலோப் ஜாமுன் போல ரசகுல்லாவிற்கும் பெரும்பாலோனோர் அடிமையாகியிருப்பார்கள். ஒரு பீஸ் ரசகுல்லாவில் 125 கலோரிகள் உண்டாம்.

தேங்காய் பர்பி
முந்திரி பர்பி, தேங்காய் பர்பி போன்றவைகளை வீட்டில் செய்வது எளிது. ஒரு பீஸ் கடலை பர்பியில் 81 கலோரிகள் இருக்கிறதாம்.தேங்காய் பர்பியில் 192 கலோரிகள் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

கொஞ்சமா சாப்பிடுங்க…
எண்ணெய் பலகாரமோ, இனிப்போ எது சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிடுங்கள்... சந்தோசமாக சர்க்கரை இன்றி தீபாவளியை கொண்டாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். கலோரியைப் போட்டு பயமுறுத்தினாலும்..,, ஸ்வீட் என்ன விலை விற்றாலும் நம்ம மக்கள் வாங்கி சாப்பிடத்தானே போகின்றனர் என்கிறீர்களா? சரி விடுங்க ஒருநாள் தானே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications