கனடா தமிழ்ச் சங்க இயக்குர் அன்புடன் புகாரிக்கு அபுதாபியில் வரவேற்பு
அபுதாபி: கனடா தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் கவிஞர் "அன்புடன் புகாரி"க்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபியில் நடைபெற்றது
கனடா தமிழ் சங்கத்தின் இயக்குநர் கவிஞர் "அன்புடன் புகாரி" அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்துள்ளார். அவருக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள செட்டிநாடு உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை மௌலவி முஹம்மது அப்பாஸ் இறைமறை வசனங்களை ஓதினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீத் அய்மான் சங்கத்தைப் பற்றியும், அதிரை கவிஞர் கலாம் சிறப்பு விருந்தினர் கவிஞர் அன்புடன் புகாரியைப் பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தினர்.

அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான், அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் கீழை ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கனடா தமிழ்ச் சங்க இயக்குநர் "அன்புடன் புகாரி" ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் செயலாளர் லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான், செயற்குழு உறுப்பினர்கள் திருவாடுதுறை அன்சாரி பாஷா, காயல் அன்சாரி, மக்கள் தொடர்புச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் கொள்ளுமேடு மௌலவி முஹம்மது ஹாரிஸ் நன்றி கூற லால்பேட்டை சல்மான் ஃபாரிஸ் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்கம் மிகச் சிறப்பாக செய்திருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications