அமெரிக்காவில் குழந்தைகள் தின விழா கோலாகலம்... ஆடல், பாடல், பேஷன் ஷோ!
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் தமிழ்நாடு அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் கிளை அமெரிக்காவில் மட்டுமல்லாமல் சென்னையிலும் உள்ளது.

கடந்த 17ஆம் தேதி, அமெரிக்காவில் உள்ள கிளையில், குழந்தைகள் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப்பாடகரான சத்தியன் மகாலிங்கமும், விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜியும் வந்திருந்தனர். சத்தியன் மகாலிங்கம் பாட்டு பாட அரங்கமே அதிர்ந்தது.

குழந்தைகளுக்கான பேஷன் ஷோவும் நடத்தப்பட்டது. அதே போல், மாத்தி யோசி என்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் வடிவேல் பாலாஜி உரையாடி விளையாடியது அனைவரையும் கவர்ந்தது.

"நான் ஒருநாள் முதல்வர் ஆனால்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் மாணவர்கள் வெளுத்து வாங்கினர். இறுதியாக குழத்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் திருமதி.மாலா கோபால் பேசியதாவது: தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் திரட்டப்படும் நிதி தமிழகத்தில் பள்ளிகள் கட்டுவதற்கும், பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொண்டு தொடருவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications