23ல் அபுதாபியில் நீயா? நானா? கோபிநாத் பங்கேற்கும் சித்திரை திருவிழா
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபியில் வரும் 23ம் தேதி பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தும் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பாரதி நட்புக்காக அமைப்பு பொழுது புலர்ந்தது என்ற பெயரில் அபுதாபியில் சித்திரை திருவிழாவை நடத்துகிறது. வரும் 23ம் தேதி அபுதாபி இந்தியன் பள்ளி கலையரங்கத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முனைவர் கு. ஞானசம்பந்தன், விஜய் டிவி நீயா/ நானா? நிகழ்ச்சி புகழ் கோபிநாத் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
23ம் தேதி மாலை 5.55 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பாரதி நட்புக்காக அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications