For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமீரக மக்களின் பழங்கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் அஜ்மான் அருங்காட்சியகம்

By Siva
Google Oneindia Tamil News

அஜ்மான்: அமீரக மக்களின் பழங்கால வாழ்க்கையினை பிரதிபலிக்கும் வகையில் அஜ்மான் அருங்காட்சியகத்தில் கண்காட்சி நடந்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்று அஜ்மான். அஜ்மான் கடற்கரையின் மிக அருகாமையில் அமைந்துள்ளது அஜ்மான் அருங்காட்சியகம்.இந்த அருங்காட்சியகம் அமீரக மக்களின் பழங்கால வாழ்க்கையினை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர பிற நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு கட்டணமாக ஐந்து திர்ஹமும், பள்ளி மாணாக்கர்களுக்கு ஒரு திர்ஹமும் வசூலிக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த அஹ்மது அல் சுவைதி, சிக்கல் ஜலால் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த மும்பையைச் சேர்ந்த தமிழர் ஞானப்பிரகாஷ் அமீரக மக்களின் வாழ்க்கையினை அறிந்து கொள்ளும் வகையில் அஜ்மான் அருங்காட்சியகம் உதவிடுவதாக குறிப்பிட்டார். மேலும் அமீரகம் மற்றும் இந்திய வரலாற்றுக்கிடையே பல்வேறு ஒற்றுமைகளையும் அறிய முடிவதாகவும் குறிப்பிட்டார்.

Don't fail to visit Ajman exhibiton

இந்த அருங்காட்சியகத்தை அமீரக வாழ் தமிழ் மக்களும் கண்டு களித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

English summary
Ajman exhibition centre is conducting an exhibition depicting the traditional life of the UAE people. All are invited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X